இடை யிட்டுக்கொண்டு நிற்கும்படியாக வாராநிற்கும்; இவள் தான் மனம்வருந்தும் படி நோயைச்செய்து போவதன்றி அந் நோய்தீர்க்கும் 1மருந்தல்லளெனச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புற்றான். எ - று. சுற்றத்தொடு போவென்றார், அவரோடு இவள் போங்காலத்து, தங் கணவற்குப்பின் 2சேறல் இயையா[ன] தென்பது பற்றி. இதனால், இவனுக்கு அசைவு பிறந்தது. இது காமஞ்சாலாவிளமையோளென்றும் (1)சூத்திரத்து வினைவலபாங்கினோரும் இங்ஙனங்கூறலா மென்றமைத்தாம் மருந்தல்லளென்றது, காமஞ்சாலா விளமையோளென்றது. மோர்விற்கின்றமை கூற வினைவலபாங்கினளாயிற்று. இஃது இவடானென ஐஞ்சீர் அடுக்கிய சுரிதகத்தான் இற்ற கலிவெண் பாட்டு. (6) (110). | கடிகொ ளிருங்காப்பிற் புல்லினத் தாயர் குடிதொறு நல்லாரை வேண்டுதி யெல்லா விடுதேண் மருந்தோநின் வேட்கை தொடுதரத் துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத் திளைத்தற் கெளியமாக் கண்டை யளைக்கெளியாள் வெண்ணெய்க்கு மன்ன ளெனக்கொண்டா யொண்ணுதா லாங்குநீ கூறி னனைத்தாக நீங்குக; | 8 | அச்சத்தான் மாறி யசைவினாற் போத்தந்து நிச்சந் தடுமாறு மெல்லிய லாய்மகண் மத்தம் பிணித்த கயிறுபோ னின்னலஞ் சுற்றிச் சுழலுமென் னெஞ்சு; | 12 | விடிந்த பொழுதினு மில்வயிற் போகாது கொடுந்தொழுவி னுட்பட்ட கன்றிற்குச் சூழுங் கடுஞ்சூலா நாகுபோ னிற்கண்டு நாளு நடுங்கஞ ருற்றதென் னெஞ்சு; | 16 | எவ்வ மிகுதர வெந்திறத் தெஞ்ஞான்று நெய்கடை பாலிற் பயன்யாது மின்றாகிக் |
1. தொல். அகத். சூ. 50. (பிரதிபேதம்)1மருந்தல்லள். எ - று. மருந்தல்லளென்றது காமஞ்...................ளென்றது மோரை விற்கின்றமை கூற.......................ளாயிற்று. இது இவடானென வஞ்சீரடுக்கிய பாட்டு, 2சேறலியையாமையான் என்பது.
|