பக்கம் எண் :

710கலித்தொகை

கைதோயன் மாத்திரை யல்லது செய்தி
யறியா தளித்தென் னுயிர்:
20 அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை
யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்
நின்றாய்நீ சென்றீ யெமர்காண்பர் நாளையுங்
கன்றொடு சேறும் புலத்து

இது வினைவலபாங்கினால் 1வெண்ணெய் (1) நொடைக்குச் சென்ற தலைவியைக்கண்டு வினைவலபாங்கிற்றலைவன் மெய்தீண்டித் தனது ஆற்றாமையை அறிவித்துழி, அவள் ஈண்டுப் பிறாறிவர், நாளைக்கன்றொடு 2சேறுமென இடங்கூறியது.

இதன் பொருள்.

கடிகொ ளிருங் (2)காப்பிற் (3)புல்லினத் தாயர்
குடிதொறு நல்லாரை வேண்டுதி யெல்லா
விடுதேண் மருந்தோநின் 3வேட்கை தொகுதரத்
துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத்
திளைத்தற் கெளியமாக் கண்டை யளைக்கெளியாள்
4வெண்ணெய்க்கு மன்ன ளெனக்கொண்டா 4யொண்ணுதா
லாங்குநீ கூறி னனைத்தாக நீங்குக

எ - து: ஏடா ! வரைவுகொண்ட பெரிய குறும்பிடத்தே இருக்கின்ற ஆட்டிடையருடைய குடிதோறுமுள்ள மகளிரை விரும்பாநின்றாய்; 6நினது காம வேட்கை எறிந்த தேளுக்குக் கடுப்பற அப்பொழுதே இட்டுத் தீர்க்கும் மருந்துபோல வேட்கைதோன்றியபொழுதே கூடத்தீர்க்க வேண்டுவதொன்றோ? அல்லவே ! நின்னோடு ஓர்நகைசெய்தலைக் குறித்து நீ என் மெய்யைத் தீண்டுதற்கு யாம் நின்னை அணைந்து மெய்யைத் தந்த 7அப்பொழுதே, எம்மைப் புணர்ச்சிக்கும் 8எளியேமாக நீ மனத்தாலேகண்டாய்; அங்ஙனங் கண்டது, மோரை வேண்டினார்க்குச் சிறிது மோரைவார்த்து எளியளானவளொருத்தி வெண்ணெயை வேண்டினார்க்கு 9வெண்ணெயை 


1. நொடைக்கு - விற்பதற்கு. இது நொடுவென்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற் பெயர்.

2. கரப்பினென்றும் படிக்கலாம்.

3. "புல்லினத்தாயர்" (கலி. 103 : 47.) என்பது மதன்குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்)1வெண்ணைஇ 2சென்றுமென, 3வாழ்க்கைதொடிதர, 4வெண்ணைக்கும், 5ஒண்ணுதலாங்கு, 6நின்காமவாட்கை, 7இப்பொழுதே, 8எளியேமாதனி, 9வெண்ணையை.