இட்டு எளியளா யிருப்பள் என்று நெஞ்சாலே 1கருதினாற்போலே இருந்ததென்றாள்; அது கேட்ட தலைவன் ஒள்ளிய நுதலினையுடையாய் ! அங்ஙனம் நீ கூட்டத்தை மறுத்துக் கூறுவையாயின், அக்கூட்டம் இல்லையாவதாக இனி நின்னை விட்டு நீங்குக என்றான். எ - று. 8 | அச்சத்தான் மாறி யசைவினாற் போத்தந்து நிச்சந் தடுமாறு மெல்லிய லாய்மகண் (1)மத்தம் பிணித்த கயிறுபோ னின்னலஞ் சுற்றிச் சுழலுமென் னெஞ்சு |
எ - து: மெல்லிய இயல்பினையுடைய ஆயச்சாதியிற் பிறந்த மகள்! மத்தைச் 2சுற்றிய கயிறுபோல 3நின்னுடைய நலத்தைச் சூழ்ந்துகொண்டு சுழன்று திரிகின்ற என்னுடைய நெஞ்சு நீ கூறிய கூற்றினால் தனக்கு உண்டாகிய அச்சத்தினாலே நின்னிடத்துநின்று மீண்டு தான் நிலைபெறமாட்டாது பின்னரும் அசைகின்ற அசைவாலே என்னிடத்தினின்றும் புறப்பட்டு் நாடோறும் மீளத் தடுமாறாநிற்கும் என்றான். எ - று. 12. | விடிந்த பொழுதினு மில்வயிற் போகாது (2)கொடுந்தொழுவி னுட்பட்ட கன்றிற்குச் சூழுங் (3)கடுஞ்சூலா நாகுபோ னிற்கண்டு நாளு 4நடுங்கஞ ருற்றதென் னெஞ்சு. |
1. (அ) "மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ, ரத்த லைவிடி னித்த லைவிடார்" சீவக. 423. (ஆ) "போயொருகான் மீளும் புகுந்தொருகான் மீண்டேகு, மாயர் கொணர்ந்த வடுபாலின் - றோயல், கடைவார்தங்கைபோலு மாயிற்றே காலன், வடிவாய வேலான் மனம்" நள. கலிதொடர். 103. 2. "நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன், காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே" சீவக. 1151. (ஆ) "கன்று தடையுண் டெதி ரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்" பெரிய. கழறிற். 135. (இ) "கன்று பிடியுறத் தீங்குறு, தாயைப்போல" கம்ப. பிணிவீட்டு. 34. (ஈ) "கன்றொழி புனிற்றர் வென்னக் கதறினர்" கந்த. பானு. 205. (உ) "அணித்தாவீன்ற கன்றெஞ்ச வினைந்தினைந்து மறுகாநின்ற கபிலையைப்போலென் பட்டாள்" வில்லி. பதினேழாம்போர். 257. என்பவையும் (ஊ) இந்நூற்பக்கம் 485 : 2 - வது குறிப்பில் இவ்விடத்திற்குப் பொருந்துவனவும் ஈண்டு அறிதற்பாலன. 3. கடுஞ்சூல் என்பது (அ) "கடுஞ்சூன் மந்தி" பெரும். 395. (ஆ) "பிடிக்குற்ற, கடுஞ்சூல் வயாவிற்கு" கலி. 40 : 26 - 27. (இ) " கடுஞ் (பிரதிபேதம்)1கருதினாப்போலே, 2சுழற்றிய, 3நின்னலஞ்சூழ்ந்து, 4நடுங்கஞரிட்டதென்.
|