பக்கம் எண் :

712கலித்தொகை

எ - து: என்று, பின்னும் முதற்சூல்கொண்ட பசு, இல்லிடத்தினின்றுந் 1தூரிய இடத்தில் இடப்படாத வளைந்த தொழுவினுள்ளே கட்டிவைத்த தன் கன்றிற்குப் பொழுது விடிந்த காலத்திலும் மேயப்போகாது சூழ்ந்துதிரியும்; அந்நாகு போலே நின்னைக் கண்டு என்னெஞ்சு நாடோறும் (1)நடுங்குகின்ற வருத்தத்தை உற்றதுகாணென்றான். எ - று.

(2)நாகு, ஈண்டு இளமை.
16 எவ்வ மிகுதர வெந்திறத் தெஞ்ஞான்று
(3)நெய்கடை பாலிற் பயன்யாது மின்றாகிக்
கைதோயன் மாத்திரை யல்லது செய்தி
யறியா தளித்தென் னுயிர்

எ - து: 2என்று பின்னரும் என்னிடத்து 3எந்நாளும் வருத்தம் மிகுகையினாலே அளித்தக்க என்னுடைய உயிர் மருந்தையிட்டு நெய்யைக் கடைந்து வாங்கின பாலிடத்து நுகர்வார்க்குச் சிறிதும் 4பயன்படுதலில்லையாய் அவர்கைசென்று தோய்ந்து விடுகின்ற அளவாய்விட்டது; அதுவும் ஒழிய மேல்தான் செய்வதோர் செயலையும் அறியாதென்றான். எ - று.

என்றதனால், நீ என் உயிரிடத்துள்ள நன்மையை ஒருவழியாலே வாங்கிக்கொண்டு விட்டாயென்றும் அது பின்னர் நீ பயன் கொள்ளுங் காலத்து நினக்கு ஓர் இன்பந் 5தருதல் ஆற்றாதென்றுங் கூறினானாயிற்று.


சூன் மடப்பிடி" அகம். 78 : 6. என விலங்குகட்கும், (ஈ) "கடுஞ்சூன் மகளிர்" மது. 609 (உ) "கடுஞ்சூற் சிறுவன்" (ஊ) "கடுஞ்சூன் மகளே" ஐங். 309, 386; (எ) "கடுஞ்சூன் மகளிர்" மணி. 7 : 82. என மக்கட்கும் கூறப்படுதலுமன்றி, (ஏ) "கடுஞ்சூல் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்" சிறுபாண். 148. என ஓரறிவுயிர்க்குங் கூறப்படுகிறது.

1. "நடுங்கஞர் - நடுங்குதற்கு ஏதுவாய அஞர்" கலி. 53 : 18; குறள். 1086. உரைபார்க்க.

2. நாகு, ஈண்டு இளமை யென்றது: நாகென்பதனை, (தொல். மர. சூ. 3. ) பெண்பாற் பெயராகக் கொள்ளாது (தொல். மர. சூ. 26.) இளமைப் பெயராகக்கொண்டு இளமையையுடைய கன்றென்று பொருள்கொள்ள வேண்டுமென்று கருதிப்போலும்; இஃது இப்பொருளில் வருவது "நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉம்" (நாலடி. 115.) என்பதனாலும் அறியலாகும்.

3. பாலைக்காய்ச்சாமலே இயந்திரத்தினுதவியால் அதிலுள்ள வெண்ணெயை யெடுத்துவிட்டு, சென்னை முதலிய இடங்களில் விற்கும் பால் உண்பவர்க்குப் பயன்படாமை இங்கே அறிதற்பாலது.

(பிரதிபேதம்) 1தூரிய இடப்படாத, 2பின்னரும், 3எந்தநாளும், 4பயன்படுதலில்லையாய வாசைசென்று, 5தருமாதலாற்றாதென்றும்.