20 | (1)அன்னையோ, மன்றத்துக் 1கண்டாங்கே சான்றார் மகளிரை 2யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய் நின்றாய்நீ சென்றீ யெமர் காண்பர் 3நாளையுங் கன்றொடு சேறும் புலத்து |
எ - து: அதுகேட்டவள், நீ அத்தன்மையையுடையையோ என அருள் செய்து, பலருந் திரிகின்ற மன்றத்திலே எதிர்ப்பட்ட அப்பொழுதேநின்னைப் போலன்றி அமைதியை யுடையோர் மகளிரை இவ்விடத்து புணர்ச்சி யின்றாயின் உயிர்வாழேனென்று நின்றாய்; இவ்விடத்து நின்றால் எம்முடையசுற்றத்தார் காண்பர்; இனி இன்றேயன்றி நாளையும் புலத்திலே கன்று மேய்த்தற்குப் போவேம்; ஆண்டு வந்து இத்தன்மையன 4உற்றவை மேற்சொல்லுவாய்; நீதான் இனி ஈண்டு நில்லாமற்போவென இடங்கூறினாள். எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சிவேட்கை பிறந்தது. இது நெடுவெண்பாட்டும் 5பின்னர் மூன்று வெண்பாட்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற அகப்புறக் கலிவெண்பாட்டு. (10) (111). | (2)தீம்பால் கறந்த கலமாற்றிக் (3)கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த |
1. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றலென்பதற்கு, (அ) "அன்னையோ...............புலத்து" என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, இதனுள் ‘அன்னையோ' என்பது நகையொடு கூடிய சொல் என்பர் இளம்பூரணர்; தொல். களவி. சூ. 20. (ஆ) வறிது நகை தோற்றற்கு "அன்னையோ....................சொல்லுவாய்" என்னும் பகுதியை மேற்கோள் காட்டுவர் நாற்கவிராசநம்பியும்; நாற்கவி. சூ. 127. 2. (அ) "ஆயர் வேட்டுவர்" என்னும் (தொல். அகத். 21.) சூத்திரவுரையில், 'ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்து ஓதினாரேனும் ஒன்றெனமுடித்தலான் அந்நிலங்கட்குரிய ஏனைப்பெயர்களான் வருவனவுங் கொள்க' என்றுகூறி, அதற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர் (ஆ) இதனைத் தலைமகள் உள்ளப் புணர்ச்சியின் உரிமைபூண்டிருந்தவாற்றிற்கும் வரைந்தெய்தக் கூறலுற்ற வாற்றிற்கும் (தொல். களவி. சூ. 8.) (இ) 1 பிறதளையான் (இயற்றளையான் என்றும் பிரதிபேதம்) வந்த கலிவெண்பாட்டுக்கும் (தொல். செய். சூ. 146. ‘ஒருபொருள்') மேற்கோள் காட்டினர் இளம்பூரணர். (ஈ) இந்நூற்பக்கம் 717 : 1 - ஆம் குறிப்பும்பார்க்க. 3. (அ) "சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்றின்" முல்லைப்பாட்டு. 12 (ஆ) "கன்று தாம்பரிந்து" சீவக. 422. (பிரதிபேதம்) 1 கண்டாங்குச் சான்றார், 2அன்றியமையலனென், 3நாளையெங் கன்றொடு, 4உற்றமேற், 5பின்னிரண்டுவெண்பாட்டும் பின்னரிரண்டுவெண்பாட்டும்.
|