பக்கம் எண் :

714கலித்தொகை

(1)பூங்கரை நீலம் 1புடைதாழ மெய்யசைஇப் (2)பாங்கரு
முல்லையுந் 2தாய (3)பாட்டங்காற் றோழிநம்
(4)புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா
மொருங்கு விளையாட வவ்வழி வந்த
(5)குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை
3முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ
10 பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் 4முற்றிழாய்
(9)தாதுசூழ் 5கூந்தற் றகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ
யேதிலார் தந்தபூக் 6கொள்வாய் நனிமிகப்
15 பேதையை மன்ற பெரிதென்றேன் 7மாதரா
யைய (7)பிதிர்ந்த (8)சுணங்கணி மென்முலைமேற்
றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர்

1. "பூங்கரை நீலந் தழீஇ" கலி. 115 : 14.

2. ‘பாங்கரும்’ என்பதை நான்காமடியின் முதற்சீராகக் கொண்டு அதனை ஐஞ்சீரடியாக்கலுமாம்.

3. "பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம்" கலி. 116 : 1.

4. இந்நூற்பக்கம் 687 : 1 - ஆங் குறிப்புப்பார்க்க.

5. (அ) "குருந்தங் கண்ணிக் கோவலர்" ஐங். 439. (ஆ) "குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப, வாயன் புகுதரும் போழ்தினான்" ஐந் - எழு. 28. (இ) "குருந்தமென் கண்ணி சூடுங் கோவலர் கொழுந்து" பாகவதம். (10) வேய்ங்குழலிசைத்த. 16.

6. "தாதுசூழ் கூந்தல்" என்பதனொடு (அ) "கொய்பூந், தாதுகொண்டளகத் தப்பி" சீவக. 2948; (ஆ) "போதுகொண் டணியிற் பொறுக்க லாற்றாத், தாதுகொண் டிருந்த தாழிருங் கூந்தலர்" பெருங். (1) 43 : 140 - 141. என்பவை ஒப்புநோக்கற்பாலன.

7. (அ) "சுணங்கு பிதிர்ந்து................வெம்முலை" சிறுபாண். 24 - 26 (ஆ) "பிதிரு மூலைமேற் சுணங்கு" திணைமொழி. 28. (இ) "பிதிர்சுணங்கணி வெம்முலை" நைடத. வேற்றுரு. 9.

8. "சுணங்கணி வனமுலை" நற். 9. 6; கலி. 60 : 1

(பிரதிபேதம்)1புடைத்தாழ, 2தாயப்பாட்டங்கால், 3முற்றிழையொணமட, முற்றிரையேர்மட, 4முற்றிய, 5கூந்தறகை, 6கொள்வானனி, 7ஆயிழாய்.