பக்கம் எண் :

நான்காவது முல்லை715

1செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது
மையலை மாதோ 2விடுகென்றேன் றையலாய்
20  சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப
வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ
யாயர் மகளி (1)ரியல்புரைத் (2)தெந்தையும்
(3)யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்.

இது தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக்கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டுமென்றது.

இதன்பொருள்.

தோழீ ! இனிய பாலைக் கறந்த கலங்களை அவ்விடத்து நின்றும் எடுத்துவைத்துக் கன்றுகளையெல்லாந் தாம்பாற் கட்டி மனைக்கண்ணே நிறுத்தித் தாய்தந்த பூத்தொழிலினையுங்கரையினையுமுடைய நீலத்தையுடைய ஆடை பக்கத்தே தாழாநிற்க மெய்யை அசைத்துப் (4) பாங்கர்க்கொடியும் முல்லைக் கொடியும்பரந்த (5) முற்றூட்டாகிய தோட்டத்திடத்தே நம்முடைய ஆட்டினத்தையுடைய ஆயர்மகளிரோடே (6) மற்றை இரு கூற்றில் 3ஆயர்மகளிரெல்லாருஞ் சேர விளையாடநிற்ப அவ்விடத்தேவந்த குருந்தம்பூவாற் செய்த கண்ணியையுடைய பொதுவன் 4பின்னே என்னை நோக்கிச் சூழ்ந்த அணிகலங்களையும் 5அழகினையும் மடப்பத்தையுமுடைய நல்லாய் ! நீ இழைத்து விளையாடுஞ் சிற்றிலை யானுஞ் சிறிது புனைவேனோ என்றான் ; யான் அதற்கு ஏடா ! வரைந்துகொண்டு எமக்கு ஒரில்லை


1. 'இயல்', என்பது 'இலக்கணம்', என்னும் பொருளில் வருதல் பெரு வழக்கு. 'இயல்பு' என்பதும் அப்பொருளில்வருதலை (அ) "அந்நான்கே மொழிபுண ரியல்பே" (ஆ) "இயல்புற நாடின்" என்னுந் தொல்காப்பிய.ப்பகுதிகட்கு இவரெழுதியிருக்கும் உரையானுமறிக.

2. "எந்தையும்...................மன்" என்பது குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தற்கு மேற்கோள்'; நாற்கவி. சூ. 164.

3. "வாவியுறையு மடவனமே யென்னுடைய, ஆவி யுவந்தளித்தா யாதியால் - காவினிடைத், தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி" நள. சுயம்வர. 50.

4. இந்நூற்பக்கம் 638 : 5 - ஆம் குறிப்புப் பார்க்க.

5. முற்றூட்டு - ஸர்வமானியம்

6. மற்றை இருகூறு - பசுவினம், எருமையினம்.

(பிரதிபேதம்)1 செய்வுற, 2விடுவென்றேன், 3ஆயமகளிர், 4பின்னேயென்னை, 5அழகினையுமுடையமடப்பத்தையுடைய நல்லாளேநீ.