மின்பமும்" என்னும் (1) சூத்திரத்து, "உறுப்புடை யதுபோ லுணர்வுடையது போன், மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு 1புணர்த்தும்" என்பதனால் உறுப்புடைத்தாகக் கூறினாள். இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது முச்சீரடியும் இருசீரடியும் இடையேவந்த கொச்சகக் கலி. (12) (113). | நலமிக நந்திய நயவரு தடமென்றோ ளலமர லமருண்க ணந்நல்லாய் நீயுறீஇ யுலமர லுயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல்; | 4 | பேரேமுற் றார்போல முன்னின்று விலக்குவா யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி: | 6 | தளரியா லென்னறிதல் வேண்டிற் பகையஞ்சாப் புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்; | 8 | ஒக்குமன்; புல்லினத் தாயனைநீ யாயிற் குடஞ்சுட்டு நல்லினத் தாய ரெமர்; | 11 | எல்லா; நின்னொடு சொல்லி னேதமோ வில்லைமன்; ஏதமன் றெல்லை வருவான் விடு; | 14 | விடேன்; உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு மெல்லிய வாத லறியினு மெல்லியா னின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழிகொண் டென்னெஞ்ச மேவல் செயின்; | 19 | நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க் கெஞ்சிய காதல்கொள் காமங் கலக்குற வேதிலார் பொய்ம்மொழி தேறுவ தென்; | 22 | தெளிந்தேன் றொயிழா யான்; | 23 | பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி லல்க லகலறை யாயமொ டாடி |
1. தொல். பொருளி. சூ. 2. (பிரதிபேதம்)1கிளந்துமென்பதனால், கிளர்ந்து மென்பதனால்.
|