முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னங் கழிப்பி யரவுற் றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே. |
இது வினைவலபாங்கிற் றலைவியை ஆற்றிடைக்கண்டு அவளை வினை வலபாங்கிற் றலைவன் விலக்கி அவளோடு சிறிது கூறியவழி அவள் 1கூட லுறுகின்றாள் கூறியது. இது கைக்கிளை. இதன் பொருள் நலமிக நந்திய நயவரு தடமென்றோ (1)ளலமர (2)லமருண்க ணந்நல்லாய் 2நீயுறீஇ (3)யுலமர லுயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல் |
எ - து: நன்மை மிகப் பெருகிய விருப்பம் வருகின்ற பெருமையை யுடைய மெல்லிய தோளினையும் சுழலுதலுடைய முகத்தோடு பொருந்தின கண்ணினையும் அழகினையுமுடைய நல்லாளே! நீ 3உற்றதனால் உழத்தலை யுடைய வருந்து நோய்க்கு (4)உய்யும் நெறியைக் கூறிப் பின்புபோ என விலக்கினான். எ - று. 4 | (5) 4பேரேமுற் றார்போல முன்னின்று விலக்குவா யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி |
1. "அலமர லுண்கண்ணார்" (கலி. 73 : 12) என்பதும் இந்நூற்பக்கம் 441 : 2 - ஆம் குறிப்பும் பார்க்க. 2. அமர்க்கண் கலி 40 : 1 ; 557 : 23. 3. (அ) "உலமரல் வருத்த முறுதும்" அகம். 18 : 13 ; (ஆ) "யா முல மர" கலி. 83 : 2. 4. உய்யும் நெறி - தப்பிப் பிழைக்கும் வழி; உயவு நோயைப் போக்கு கின்ற வழியென்றுமாம். 5. (அ) எல்லான் என்பது எல்லாவென அண்மைக்கண் ஈறழிந்ததென்று கொண்டு, "பேரேமுற் றார்போல......................யாரெல்லா" என்னும்பகுதியை மேற்கோள்காட்டுவர், மயிலைநாதர்; நன். பெயரி. சூ. 50 (ஆ) "ஏமுறவிரண்டு முளவென மொழிப" என்புழி ஏமுறல் மயங்குதலை யுணர்த்திவருதற்கு "பேரேமுற்றார்போலமுன்னின்று விலக்குவாய்" (பிரதிபேதம்)1 கூடஉடம்பட்டாளாக அலள் கூறியது, இது, 2நீயுறீ இயவுலமரல், 3உறுதி சூழ்தலையுடைய, 4பேரேமுற் றாய்போல.
|