எ - து: அதுகேட்டவள், ஏடா! நின்னை முன்பு கண்டு அறிந்ததூஉ மில்லாத என்னிடத்தே பெரிய பித்தேறினாரைப் போல முன்னே நின்று (1) விலக்குகின்ற நீ யார்தான் என்றாள். எ - று: 6 (2)தளரியா லென்னறிதல் வேண்டிற் பகையஞ்சாப் (3)புல்லினத் தாயர் மகனேன் மற்றியான் எ - து: அதுகேட்டவன், என்னை நீ அறிதலை விரும்பின் மனந்தளர் கின்ற இயல்பினையுடையாய்! யான் பகைக்கு அஞ்சாத ஆட்டினத்தை யுடைய ஆயரானவர்க்கு ஒருமகனாத 1லுளேனென்று தன் செல்வக்குடிப் பிறப்பு உணர்த்தினான். எ - று. 8 | 2ஒக்குமன் | | புல்லினத் தாயனைநி யரயிற் (4) குடஞ்சுட்டு நல்லினத் தாய ரெமர் |
எ -து: அதுகேட்டவள், அதுமிகவும் ஒக்குமென அதற்குஉடம்பட்டு, பின்னர் நீ ஆட்டினத்தையுடைய ஆயனாந் தன்மையையுடையையாயின் எம்முடைய சுற்றத்தார் நும் இனத்திற் சிறந்த இன்னதனைக் குடம் பால் போதுமென்று கருதப்படும் பசுவினத்தையுடைய இடையரெனத்தன்செல்வக் குடிப்பிறப்பு உணர்த்தினாள். எ - று.
11 | எல்லா | | நின்னொடு சொல்லி னேதமோ வில்லைமன் |
எ - து: அதுகேட்டவன், ஏடீ! இங்ஙனஞ் சிறந்த நின்னோடே சில மொழி கூறின் மிகக் குற்றமோ இல்லை என்றான். எ - று. 13 | 3ஏதமன் றெல்லை வருவான் விடு |
எ - து: அதுகேட்டவள், இருவரும் ஒத்த குடியாயிற் பின்னைச் சில 4கூறிற் குற்றமென்? யான் நாளைவருதற்கு இப்பொழுது போகவிடு என்றாள். எ - று.
என்பது மேற்கோள்; தொல் கள சூ, 18. நச். (இ) "எம்மை, முன்னைநின் றாங்கே விலக்கிய வெல்லாநீ யென்னேமுற் றாஅய் விடு" (கலி. 114 : 2 - 4.) என்பது இதனோடு ஒப்புநோக்கற்பாலது. (ஈ) "பேரே முறுநர்" என்பது நற். 220 : 7. (உ) இந்நூற்பக்கம் 445 : 4 - ஆங் குறிப்பும் பார்க்க. 1. "நின்னைத் தகைத்தனேன்" கலி. 108 : 20. 2. "தளரிய லவரொடு" கலி. 66 : 17. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 3. கலி. 107 : 2. அடியையும் அதன் குறிப்பையும் பார்க்க. 4. இந்நூற்பக்கம் 687 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்)1 உடையேனென்று, 2ஓக்கும்புல்லி, 3ஏதமன்றென்னை, 4கூறிக்குற்றமென்.
|