பக்கம் எண் :

நான்காவது முல்லை725

14 விடேன்

உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு
மெல்லிய 1வாத லறியினு மெல்லியா [கொண்
(1)னின்மொழிகொண் டியானோ 2விடுவேன்மற் றென்மொழி
டென்னெஞ்ச மேவல் செயின்

எ - து: அதுகேட்டவன், யான் விடேனென்று கூறி, பின்னரும் (2) என்னுடைய வார்த்தையைக் கேட்டு என் நெஞ்சம் அறியாமையிலேபுகுந்து எனக்கு ஏவலைச் செய்யுமாயின், உலகத்தில் ஒருகாரியக்கூற்றால் (3) உடன் பட்டு மனத்தால் உடன்படாதார் கூற்றுச் செவிக்கு மெத்தென்றிருத்தலை அறிந்திருந்தே 3னாயினும், மெல்லிய இயல்பினையுடையாய்! நின்னுடைய வஞ்சமானமொழியை உண்மையாகக் கொண்டு யானோ போகவிடுவேன்; அதனாற் பெற்றதென் ? அஃது ஏவல்செய்யாதாயிற்றே என்றான். எ - று.

19 

நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க் கெஞ்சிய
(4)காதல்கொள் காமங் கலக்குற (5) வேதிலார்
4பொய்ம்மொழி தேறுவ தென்

எ - து: நின்னைக் கைகடந்து நின்ற காதலைக் கொண்ட காமங் கலக்குதலுறுகையினாலே என்னெஞ்சு எனக்கு ஏவலைச்செய்யாதெனச் சொல்லிநின்ற உனக்கு ஏதிலார் கூறிய பொய்யாகிய வார்த்தையைத் தெளியுந்தன்மை எங்ஙனே உண்டாயிற்று என்றாள். எ - று.


1. "நின்மொழி...................................செயின்" என்பது மறுத்துரைப்பதுபோல் தலை மகன் கூற்று உவகைபற்றிவந்ததற்கு மேற்கோள்; தொல். பொருளி சூ. 2. இளம்.

2. "அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே, நீயெமக் காகாதது" குறள். 1291.

3. (அ) "மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ், சொல்லினாற் றேறற்பாற் றன்று" (ஆ) "நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ, லொல்லை யுணரப் படும்" குறள். 825. 826.

4. (அ) "காதற் காமங் காமத்துச் சிறந்தது" பரி 9 : 14. (ஆ) "காதல் செய் காமங் கனற்ற" பு-வெ. கைக்கிளை. பெண்பாற். 4.

5. "ஏதிலார் யாதும் புகல விறைமகன், கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று, காக்கை வெளிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை, சால்புடைத் தென்பாரு முண்டு" நீதிநெறி. 33.

(பிரதிபேதம்)1ஆகலறியினும், 2விடுவேனென்மொழி, 3ஆயிலும், 4நின்மொழி.