ஏதிலாரென்றது, தான் ஏதிலேனல்லேனென்னும் பொருண்மை குறிப்பாய்த் தோன்றக் கூறியது. பொய்ம்மொழி யென்றது தான் உண்மைகூறவும் பொய்யாகக் கொண்டானென்பது தோன்றக் கூறியது. 22 | தெளிந்தேன் 1றெரியிழா யான் |
எ - து: அதுகேட்டவன், தெரிந்த இழையினையுடையாய்! நீ இப்பொழுது கூறிய கூற்றால் நீ முன்னர் ‘வருவான் விடு’ என்றது உண்மை யென்று யான் 2தெளிந்தேன் என்றான். எ - று. 23 | பல்கால்யாங்கான்யாற் றவிர்மணற் றண்பொழி லல்க லகலறை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற 3தின்னங் கழிப்பி யரவுற்(1) றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே |
எ - து: என்று பின்னர், யாம் முல்லைப்பூவைக் குருந்தம்பூவோடே முடியிலே சூடிப் பலகாலுங் காட்டாற்றில் விளங்குகின்ற மணலையுடைய குளிர்ந்த பொழிலிடத்து யாம் முன்பு 4தங்கும் அகன்ற பாறையிலே ஆயத்தோடே விளையாடுகையினாலே பகற்பொழுது போய் இராப்பொழுது வந்து தோன்றிற்று; அது வருவதற்கு முன்னர்ப் போகாமல் 5தாழ்க்கின் நம்மைக் கோபிப்பார்கள்; அதனை உணராது நீ இன்னங் காலங்கழியாநின்றாய்; பல பசுவினத்தினுடைய திரளுக்குள்ளே, (2) பாம்புசேர்கையினாலே அதிரும் உருமி னுடைய குரல்போல அதிரும் பொருகின்ற மாறுபாட்டினையுடைய நல்ல (3) ஏறுநாகுடனே தம்மிற் கூடி நின்றன; அவைபோல நாமுங்கூடிச் சேரப் போதற்குக் கூட்டத்திற்கு உடம்படுவாயாக என்றான். எ - று.
1. (அ) "வானேறு வானத் துரற்ற வயமுர, ணானேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்ப" கார். 10. (ஆ) " இடியார் கடுமுழக் கேறு" தே. (இ) "இடிக்குர லானேற் றினமெதிர் செறுப்ப" கலி. 98 : 10. (ஈ) "(அடலேறு) இடியிட்டதிர்கா ரெதிறேற்றெழுந் தாங்கு நோக்கி" திருவிளை. மாயப்பசுவை வதைத்த. 17. 2. இந்நூற்பக்கம் 274 : 5 - ஆம் குறிப்புப் பார்க்க. 3. "மல்லன் மறுகின் மடநா குடனாகச், செல்லு மழவிடைபோற் செம் மாந்து" நள. சுயம். 156. (பிரதிபேதம்)1தெரியிழாய் எ - து, 2தெரிந்தேன், 3இன்னும், 4தங்கும்பாறையிலே, 5தாட்சின்.
|