"ஓங்குசினைத் தொடுத்த 1வூசல் பாம்பென, முழுமுத றுமிய வுருமெறிந் தன்றே" (1) என்றார் பிறரும். (2)யாங் கூட ஆயத்தோடு ஆடியெனத் தானுங்கூட ஆடினானென்றதனானும், பொழுது 2வைகிப்போதற்குத் தாம் தமக்குரியரல்லரென்றமையானும், ஏறும் நாகுங் கூடப் போமாறுபோல நாமுங் கூடப்போக என்றமையானும், வினைவல பாங்கினராயிற்று. அரவுறவெனத் திரிக்க. இதனால், இருவர்க்கும் புணர்ச்சிவேட்கை பிறந்தது. இது தரவும் இரண்டடியான் இரண்டு கொச்சகமும் தனிச்சொல்லும் குறுவெண்பாட்டும் தனிச்சொல்லும் ஓரடியான் இரண்டும் தனிச்சொல்லும் நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சிந்தடி 3யோரடியா னொன்றும் சொற்சீரடியும் ஐஞ்சீரும் வந்து (3) போக்கிலக்கண 4மில்லாத ஆசிரியச் சுரிதகமும் பெற்ற 5உறழ்கலி. (114). | வாரிநெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த வோரிப் புதல்வ னழுதன னென்பவோ புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால் வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ தோழி யவனுழைச் சென்று; | 7 | சென்றியா னறிவேன் கூறுக மற்றினி; |
1. அகம். 68 : 6 - 7. 2. "அடியோர் பாங்கினும்" என்னும் தொல். அகத். 23 - ஆம் சூத்திரவுரையிலும் இவ்வுரையாசிரியர் தலைவனும் தலைவியும் வினைவல பாங்கின ரென்ப தற்கு "பல்கால்யாங்............................செலற்கே" என்னும்பகுதியை மேற்கோள்காட்டி, இக்குறிப்புக்குச் சிறிது வேறாக "இது தாழ்த்துப் போதற்குத் தலைமையின்றிக் கடிதிற்போகல் வேண்டுமென்றமை யானும், நல்லேறும் நாகும்போல் நாமுங் கூடப் போகல் வேண்டுமென்றமையானும் தலைவன் வினைவலபாங்கின னாயிற்றென்க., வினைவல்லானென்னாதுபாங்கினென்றதனால் தமரேவல்செய்வது பெறுதும்; இஃது அவ்வந்நிலத்து இழிந்தோர்க்கு எஞ்ஞான்றும் தொழிலேயாய் நிகழும்" என்று எழுதி யிருக்கிறார். 3. இது போக்கிலக்கணமில்லாத ஆசிரியச்சுரிதகம் பெற்று உறழ்கலி யாயிற்றென்பர் பேராசிரியரும் நச்சினார்கினியரும் அவ்வாறே கூறுவர். தொல். செய். சூ. 156. (பிரதிபேதம்)1பூதலம்பாம்பென, 2வைகிற்போதற்கு, 3ஓரடியானொன்றுமஞ்சீரும், 4இல்வழி ஆசிரியச், 5ஓத்தாழிசைக்கலி.
|