8 | சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா நினக்கொரூஉ மற்றென் றகலகலு நீடின்று நினக்கு வருவதாகக் காண்பா யனைத்தாகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு; | 12 | தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி யெருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் தனித்தே யொழிய வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுத லாயத்தார் தம்முட் புணர்ந்த வொருமணந் தானறியு மாயி னெனைத்துந் தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினு மருநெறி யாயர் மகளிர்க் கிருமணங் கூடுத லில்லியல் பன்றே. |
இஃது "ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ (1) 1என்பது, அவன் வரைவுவேண்டின 2இடத்து அவ்வரைவு புறத்த தாகியவழித் தலைவி தன்னுயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முற்கூறியவற்றைத் 3தொகுத்து" என்று பொருள்கூறி, "அதன்புறமெனவே அதற்கு அயலாகிய நொதுமலர்வரைவாயிற்று" என்றும்; உயர்வு, (2) குடிப்பிறப்புங் கற்பும்; அதற்கேற்பப் பிறர்வரைவு மறுத்துத் 4தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் 5கூறியது. இதன் பொருள் வாரி நெறிப்பட் டிரும்புறந் 6தா அழ்ந்த (3)வோரிப் புதல்வ னழுதன 7னென்பவோ |
1. தொல். களவி. சூ. 16. இதனுரையில் இவர் இச்செய்திக்கே இச்செய்யுளைமேற்கோள்காட்டி, சிறிதுவேறுபட இக்குறிப்பையும் எழுதியிருக்கிறார். 2. (அ) "இற்பிறப்பு மொழுக்கு மிழுக்க மில், கற்பும் யான்பிறர்க் கெங்ஙனங் காட்டுகேன்" (ஆ) "இயற்பிறப் பென்ப தொன்று மிரும்பொறையென்ப தொன்றுங், கற்பெனும் பெயர தொன்றுங் களிநடம் புரியக் கண்டேன்" கம்ப. சூடாமணி. 17, திருவடி, 62. 3. ஓரி - ஆண்பிள்ளையின் தலைமயிர். (பிரதிபேதம்)1 என்றது, 2இடத்தே வரைவு இடத்துவரைவு, 3தொகுத்தென்பதற்குப் பொருள். அதன்புறமெனவேநொதுமலர்வரைவாயிற்று, உயர்வு, 4தலைவனை வரையுமாறு, 5கூறினாள், 6தாழ்ந்த, 7என்பவோ வோரும்புதுவ.
|