பக்கம் எண் :

நான்காவது முல்லை729

புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால்
வதுவை யயர்வாரைக் 1கண்டு மதியறியா
வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ
தோழி யவனுழைச் சென்று

2எ - து: தோழீ! புதியனவாகிய மலர்களைச் சூடி எம்முடைய சுற்றத்தார் என்பெயரைச் சொல்லிப் பெண்பிள்ளைக்கலியாணஞ் செய்கின்றவர்களைக் 3கண்டு வைத்தும் கோதி நெறித்தற்றொழிலிலே பட்டுப் பெரிய முதுகிலே தாழ்ந்துகிடக்கின்ற மயிரினையுடைய புதல்வன் அழுதனனென்பவோ? அங்ஙனங் கூறுவார்களாயின், நீ அவனிடத்தே சென்று இவ்வதுவை நின்னை விட்டு அகலாநிற்க அது நின்னிடத்தே ஆம்படி வரைந்துகொள்ளும் மதியை அறியாதஏழைத்தன்மையையுடையையென்று சிரித்துவாரா 4யென்றாள் எ - று.

கோதி நெறித்து முதுகிலே கிடக்கின்ற மயிரினையுடைய புதல்வனென் றதனாற் பயன், மயிர்முடி கூடி இளமை முதிர்ந்து காமச்செவ்வி அறிந்து களவொழுக்கத்திற்கு உரியனாயும் தான் வரைந்து கொள்ளுந் தன்மை அறியாமல் இருமுதுகுரவர்கீழே நிற்கின்ற பிள்ளையாயிருக்கின்றவனென்பது உணர்த்திற்று.

அழுதனனென்பவோ என்றது, (1) நொதுமலர்வரைவுவந் துழியும் தான் வரைவின் முயலாது வருந்தினானென்று ஊரிலுள்ளார் கூறுவார்களோ என்ற வாறு இஃது அழுகையென்னும் மெய்ப்பாடு பெயராலென்பது உருபுமயக்கம்.

சென்றியா னறிவேன் கூறுக 5மற்றினி

எ - து: அதுகேட்ட தோழி ஆண்டுச்சென்று அவனிலையை அறிவேன்; பின்னை, அவற்குக் கூறுவனவற்றை இனிக் கூறுவாயாக என்றாள். எ - று.

சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா
நினக்கொரூஉ 6மற்றென் றகலகலு நீடின்று
நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் 7கூறு

எ - து: அதுகேட்ட தலைவி, மடவாய்! நீ அவனிடத்தே சென்று ஏடா! நின்குரவரை நோக்கி இவ்வதுவை என்னிடத்தே 8யாகவேண்டு மென்று 


1. நொதுமலர் - அயலார்.

(பிரதிபேதம்)1கண்டுவிலக்கிமதி, 2எ - து, கோதி நெறித்தற்...................... தாழ்ந்துகிடக்கின்ற புதல்வனென்றதனாற் பயன்............................... களவொழுக்கத்திற்கு முரியனாயுந்......................................மெய்ப்பாடு, தோழி! புதியவாகிய, 3கண்டுவைத்துமோரிப்புதல்வன், 4என்றாள். பெயராலென்பது, 5மாற்றினி, 6மற்றென்றகல், எ - து: அதுகேட்ட தலைவி மடவாய் என்றாள்.......................வினாயினமைபற்றி, அகலநீடின்று நினக்கு, 7கூறு என்பது மடவாய்நீ, 8ஆகவேணுமென்று.