சொல்லுஞ் சொல்லை அறியாதபேதை; ஆகையினாலே 1இவ்வதுவை நினக்குரித்தன்றி அகலும்; அவ்வகற்சிதான் நீட்டித்தலில்லை; அது நொது மலர்க்கின்றி நினக்குவருவதாக நெஞ்சாலே காண்பாய்; அங்ஙனங் 2காணா யாயின் அது நின்னை ஒருவுமென்று நீங்கு; அங்ஙனம் நீங்கும்பொழுது இவ்வதுவை தனக்குரித்தாக முயலும்படி நீ சொல்லிய சொற்றானும் முன்பு வரைவுகடாயவுஞ் 3சொல்லாத அவன் நினையாமல் (1) நின் ஏவலை அவன் மனங் காரியமென்றே கொள்ளும்படி கூறுவாயாக 4என்றாள். எ - று. மடவாயென்றாள், ஆண்டுக்கூறுவனவற்றைத் (2) தான் அறியாள்போலத் தன்னை வினாயினமைபற்றி. 12 | (3)தரு (4)மணற் றாழப்பெய் தில் (5)பூவ லூட்டி யெருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் (6) தனித்தே (7) யொழிய (8) வரிமணன் முன்றுறைச் சிற்றில் 5புனைந்த |
1. “விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது, சொல்லுதல் வல்லார்ப் பெறின்” குறள். 948. 2. “தானறிந்து கூறுந் தலைமற் றிடையது, கோனறைந்த தீதென்று கூறுமால்” பாரதம். 3. (அ) ”தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து” நெடுதல். 90. நற். 143. 2. பெருங். (1) 47: 197. (ஆ) “தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றம்” அகம். 187. 9. (இ) “தருமணன் முற்றத்து” மது. 984; பெருங். (1) 34: 40. (ஈ) “தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறை” மணி. 18: 44. (உ) “தருமணற் பேரில்” (ஊ) “தருமணற் பந்தர்” (எ) ”தருமணன் ஞெமரிய தண்பூம் பந்தருள்” பெருங். (1) 33; 134; 36: 41; (4) 6: 12. 4. “வரைப்பின் மணற்றாழப் பெய்து” கலி. 115: 19. 5. (அ) ”பூவலூட்டிய புனைமாண் பந்தர்க், காவற்சிற்றிற்கடிமனை” சிலப். 16: 5 - 6. (ஆ) “பூவற் படுவில்” புறம். 319: 1. (இ) “பூவலங் குன்றம்” களவழ. 12. 6. “தனித்து” என்பதைத் தனிக்கவெனத் திரித்து, யான் தனியே நீங்கினேனாக என்க. 7. ‘ஒழிய’ என்பதற்கு அவனையன்றி வேறு சிலரிடத்தே தங்குகையினாலே என்பதைப் பொருளாகக்கொள்க; ஒழிதல் - நீங்குதல். இஃது இப்பொருட்டாதலை ‘ஒழிய’ ‘ஒழிந்திட்டாள்’ (சீவக. 2361, 2504) என்பவற்றுக் கெழுதியிருக்கும் உரையான் உணர்க. 8. “வரிமணல்” பட். 60. கலி. 127 : 5. (பிரதிபேதம்)1பின்னைஇவ்வதுவை, 2காணாயாயிற் பின்னை அது, 3சொல்லாக அவன், 4என்றாள்தருமணல், 5புனைந்துதிருநுதல்.
|