பக்கம் எண் :

நான்காவது முல்லை731

திருநுத லாயத்தார் 1தம்முட் புணர்ந்த
வொருமணந் தானறியு மாயி னெனைத்துந்
தெருமரல் கைவிட் டிருக்கோ 2வலர்ந்த
விரிநீ ருடுக்கை (1) யுலகம் பெறினு
மருநெறி யாயர் மகளிர்க்
கிருமணங் 3கூடுத லில்லியல் பன்றே

எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.

இனி, இருமணங்கூடுதல் இயல்பன்றாயிருக்க ஒருமணந்தான் அறியு மாயிற் பெருமணமெல்லாந் தனித்தே 7ஒழியச்செய்தே தெருமரல் கைவிட் டிருக்கோ என்றாற் பொருண்முடியாமை காண்க.

இதனால், தலைவிக்குத் தம் மிறையால் அச்சமே தோன்றிற்று.


1. “பழியெனி, னுலகுடன் பெறினுங் கொள்ளலர்” புறம். 182: 5 - 6.

2. “முன்றுறை” என்பதற்குத் ‘துறை முன்’ என்றே. பொருள் கூறுவர், பிறரும்; பரி. 12: 36: புறம். 136: 25.

3. “தாயே, புனைமா ணிஞ்சி பூவ லூட்டி, மனைமண லடுத்து மாலை நாற்றி, யுவந்தினி தயரும்” அகம். 195: 2 - 5.

4. “பூவலூட்டி” (அகம். 195: 3.) என்பதற்கு, சுவரைப் புதுக்கோலஞ் செய்து என்றும் பூவல் - சிவப்பு என்றும் குறிப்புக் காணப்படுகிறது.

5. இச்செய்தி வேறெங்கும் கண்டதன்று.

(பிரதிபேதம்)1தம்மிற்புணர்ந்த, 2மலர்ந்த, 3கூறுதல், 4யானிங்கினேனாக, 5உண்டாகின்றது, 6சிறிதுங்கை, 7ஒழிகைசெய்தே.