பக்கம் எண் :

732கலித்தொகை

எருமைப் பெடையென்றது 1“பேடையும் பெடையும்” என்னும் (1) சூத்திரத்து நாடினென்றதனால் அமைத்தாம். (2) இது வெள்ளைக்கொச்சகமும் ஒரடியானென்றும் கொச்சகமும் போக்கிலக்கண 2மில்லாத ஆசிரியச்சுரிதகமும் பெற்ற உறழ்கலி. (14)

(115). தோழிநாங், காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர
நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்
கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்நம்
புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர்
5 முல்லை யொருகாழுங் கண்ணியு மெல்லியால்
கூந்தலுட் பெய்து முடித்தேன்மற் றோழியாய்
வெண்ணெ யுரைஇ விரித்த கதுப்போடே
யன்னையு மத்தனு மில்லரா யாய்நாண 
வன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ;
10 அதனை, வினவலுஞ் செய்யாள் சினவலுஞ் செய்யா
ணெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கிப் புறங்கடைப் போயினாள் யானுமென்
சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த
பூங்கரை நீலந் தழீஇத் தளர்பொல்கிப்
பாங்கருங் கானத் தொளித்தே னதற்கெல்லா
வீங்கெவ னஞ்சு வது;
17 அஞ்சல், அவன் கண்ணி நீபுனைந்தா யாயி னமரு
மவன்க ணடைசூழ்ந்தார் நின்னை யகன்கண்
வரைப்பின் மணற்றாழப் பெய்து திரைப்பில்
வதுவையு மீங்கே யயர்ப வதுவேயா
மல்கலுஞ் சூழ்ந்த வினை.

இது தலைவி களவுவெளிப்பட்டதென்று அஞ்சித்தோழிக்குச் 3சொல்ல, 4நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தாரெனச் சொல்லி அச்சம் நீக்கியது.


1. தொல். மரபியல். சூ. 54.

2. இச்செய்யுள் போக்கிலக்கணமில்லாத ஆரியச் சுரிதகம்பெற்ற உறழ் கலிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 156. பேர். நச்.

(பிரதிபேதம்)1பேடை பெடையும், பெட்டையும் பெடையும், 2இல்லாவாசிரிய, 3சொல்லவேநின்னை, 4எமர்.