இதனால், தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது.
41 | பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக் கோடுலக்கை யாகநற் சேம்பி னிலைசுளகா வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம் பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபா டுற்று; |
5 | இடியுமிழ்பிரங்கிய விரவுபெய னடுநாட் கொடிவிடு பிருளியமின்னுச்செய் விளக்கத்துப் பிடியொடு மேயுஞ்செய்புன் யானை யடியொதுங் கியக்கங் கேட்டகானவ னெடுவரை யாசினிப் பணவை யேறிக் |
10 | கடுவிசைக்கவணையிற் கல்கை விடுதலி னிறுவரை வேங்கையி னோள்வீசிதறி யாசினி மென்பழ மளிந்தவை யுதிராத் தேன்செ யிறாஅறுளைபடக் போகி நறுவடி மாவின் பைந்துணருழக்கிக |
15 | குலையுடைவாழைக் கொழுமடல் கிழியாப் பலவின் பழத்துட்டங்கு மலைகெழு வெற்பனைப் பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று; |
18 | இலங்குமருவித் திலங்கு மருவித்தே வானி னிலங்குமருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை; |
21 | பொய்த்தற்குரியனோ பொய்த்தற் குரியனோ வஞ்சலோம்பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றகனன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுட்டீத்தோன்றி யற்று; |
25 | இளமழை யாடுமிளமழை யாடு மிளமழை வைகலு மாடுமென் முன்கை வளைநெகிழவாராதோன் குன்று; |
28 | வாராதமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவா னல்லன்மலைநாட |