பக்கம் எண் :

248கலித்தொகை

மென் (1) றோட் கிழவனும் வந்தன னுந்தையு
மன்றல் வேங்கைக் கீழிருந்து
மணநயந் தனனம் மலைகிழ வோற்கே

எ - து: தோழி! நம் வள்ளைப்பாட்டிடத்தே நாம் பொருந்திப்பாட நம்மென்றோட்கு உரிமையையுடையவனும் மறைந்துநின்றுகேட்டு அருள்பண்ணி வரைவுவேண்டி வந்தனன்;உன்னுடைய தந்தை மணத்தையுடைய வேங்கைக் கீழே இருந்து அம்மலைகிழவோனுக்கு மணஞ்செய்தலை விரும்பிக்கூறினான்; ஆதலால், நமக்குநன்மை (2) யுண்டாகாநின்றது. இனி நீ வருந்தாதேகொள்; 1 எ - று.

இதனால், தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது. இதன் இடைப்பாட்டுக்கள் "வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரை தீர்கிளவி புல்லிய வெதிரும்" (3) என்பதனான் இயற்பழிக்க இயற்பட மொழிந்தனள்.

இது தரவும் 'ஐஞ்சீரடி 2வந்த கொச்சகமும் கொச்சகவெண்பாக்களும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று 3வந்த, கலிவெண்பாவின் வேறுபட்ட கொச்சகக் கலி. (5)

(42) மறங்கொ ளிரும்புலித் தொன்முரண் டொலைத்த
முறஞ்செவி வாரண முன்குள கருந்திக்
கறங்குவெள் ளருவி யோலிற் றுஞ்சும்
பிறங்கிருஞ் சோலை நன்மலை நாடன்
5மறந்தான்மறக்கினி யெல்லா நமக்குச்
சிறந்தன நாநற்கறிந்தன மாயி னவன்றிறங்
கொல்யானைக்கோட்டால் வெதிர்நெற் குறுவாநாம்
வள்ளை யகவுவம் வா,இகுளைநாம்
வள்ளை யகவுவம் வா;
10காணிய வாவாழிதோழி வரைத்தாழ்பு
வாணிறங் கொண்ட வருவித்தேநம்மருளா
நாணிலி நாட்டு மலை;

1. (அ) "சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே,மாசின் றாதலு மறியான்" அகம,். 32 : 18 - 19. (ஆ) "ஒலிபுன லூரன்,கிழமை யுடையனென் றோட்கு" திணைமொழியைம்பது. 31.

2. ஆகின்றென்பதை இறந்த காலமாகவும் கொள்வர், புறநானூற்றுரைகாரர்; புறம். 1 : 7, 9 ; 147 : 7.

3. தொல். கள. சூ. 16. இந்நூற்பக்கம், 243: 2-ம் குறிப்பு (அ) பார்க்க.

(பிரதிபேதம்) 1 என வரைவுமலிந்தமை கூறினாள்,2 வந்த கொச்சகவெண்பாக்களும், 3 வந்துகலி.