பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி271

எ - து: என்னுடைய தோழி காமநோய் வருத்துகையினாலே வருந்தியும் நீசெய்த அருளில்லாமையை ஆயத்தையும் மறைத்தாள்; அவள் இங்ஙனம் மறைத்தது அவ்வரு ளின்மையைக் கேட்டு மாயத்தை வல்ல நினது பண்பில்லாமையைப் பிறர்கூறுதலைத் தான் நாணிக்காண் ; எ - று.

ஆயத்திற்கும் வருத்தம் புலப்படாமை மறைத்தாளென்ற உம்மை, சிறப்பும்மை.

1எனவாங்கு, அசை.

18 இனையன தீமை நினைவனள் காத்தாங்
கனையரும் பண்பினா னின்றீமை காத்தவ
ளருந்துய ராரஞர் தீர்க்கு
மருந்தாகிச் செல்கம் பெருமநாம் விரைந்தே

எ - து: நினது தீமையான் உண்டாகிய அருந்துயரத்தை அத்தன்மைத்தாகிய அரிய நற்குணத்தினானே நீ பின்னர்க் காத்தாற்போல இத்தன்மையனவாகிய தீமைகளைப் பிறரறியாதபடி நினைத்தாளாய்க் காத்தவளுடைய ஆரஞரைத்தீர்க்கும் மருந்தாகிப் பெருமா ! நாம்விரைந்துசெல்வேம்; 2எ - று.

தீமையாயின: இட்டுப் பிரிவும் அருமை செய்தயர்த்தலுமாம்.

இதனால், தலைவற்கு 3விரைவுபிறந்தது.

இஃது ஏழடித்தரவும் மூன்றடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (8)

(45) விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறைக்
கடிசுனைக் கவினிய காந்தளங் குலையினை
யருமணி யவிருத்தி யரவுநீ ருணல்செத்துப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெய
லுருமுக்கண் ணுறுதலி னுயர்குர லொலியோடி
நறுவீய நனஞ்சாரற் சிலம்பலிற் கதுமெனச்
சிறுகுடி துயிலெழூஉஞ் சேணுயர் விறல்வெற்ப;
8 கால்பொரநுடங்கல கறங்கிசை யருவிநின்
மால்வரை மலிசுனைமலரேய்க்கு மென்பதோ
புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பியவென்றோழி
பல்லிதழ் மலருண்கண் பசப்பநீசிதைத்ததை;
12புகர்முகக் களிறொடு புலிபொருதுழக்குநின்
னகன்மலை யடுக்கத்த வமையேய்க்குமென்பதோ

(பிரதிபேதம்) 1 ஆங்கசை, இனையின தீமை, 2 என வரைவு கடாவினாள் 3 வரைவு