எ - து : நம்மை நாண் வருத்துகையினாலே அவனைப் போக்குதல் நமக்கும் அவன் இறந்துபடுகின்ற நிலைமைக்கட் பொருந்தாது, அவன் இறந்துபடுகின்றவனைப் பேணினாரென்று நன்மக்கள் புகழ்ந்துகூறப்படுதல் நின் கருத்தாற் பெண்மையுமன்றாயிராநின்றது ; இங்ஙனமாகவும், அவன் நின்னை முயங்குமளவைத் தன் நெஞ்சாலே கைக்கொண்டுவிட்டான்; அதற்கு நீ 1மேவுகின்றிலை, இதற்கு யான் இனிக் கூறுவதொன்றின்றெனத் தலைவிக்குக் கூறி, பின்னைத் தோழி தன்னெஞ்சோடு முன்னிலைப் புறமொழியாகக் 2கூறுவாள் குறியிடத்தேவாவென்று 3கூறுவாள்போலே அவனுக்குஒரு பொய்க்குறியைக் காட்டி அவன் மேவின வழியிலே நெஞ்சே மேவுவாயாக என்றாள் ; எ - று. இதனால், தலைவிக்குச் சூழ்ச்சி பிறந்தது. (1)இஃது ஒன்றெனச் சொற்சீரும் அவனையெனத் தனிச்சொல்லும் 4பெற்று, தாழிசையுள்ஏனைமூன்றடியாக ஒன்றுநான்கடியாய் வந்தமையிற் கொச்சகக்கலியாயிற்று. (11) (48). | ஆமிழி யணிமலை யலர்வேங்கைத் தகைபோலத் தேமூசு நனைகவுட் டிசைகாவல் கொளற்கொத்த வாய்நில்லா வலிமுன்பின் வண்டூது புகர்முகப் படுமழை யடுக்கத்த மாவிசும் போங்கிய கடிமரத் துருத்திய கமழ்கடாந் திகழ்தரும் பெருங்களிற் றினத்தொடு வீங்கெருத் தெறுழ்முன்பி னிரும்புலி மயக்குற்ற விகன்மலை நன்னாட ; | 8 | வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால் வாழுநாட் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ தாழ்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சார லூழுறு கோடல்போ லெல்வளை யுகுபவால் |
1. வெண்கலியுறுப்பு நிலையொத்துப் பாவேறுபடுங் கொச்சகத்துக்கு இச்செய்யுளை மேற்கோள்காட்டி, இது தரவும் கொச்சகமும் சுரிதகமும் முறையானே வந்து ஆசிரியச் சுரிதகத்தான் இற்றது என்று கூறி இவற்றையும் எழுதுவர் பே, ‘இது ஒன்றெனவும் அவனெனவுஞ் சொற்சீருந் தனிச்சொல்லும் வந்து இடைநிலைப்பாட்டினுள் ஒன்றோ ரடிமிக்கு ஒருபொருண்மேல் மூன்றுவருதலின் ஒத்தாழிசையாகாது கொச்சகமாய்க் கலிவெண்பாட்டின் வேறாயிற்று’ என்பர். நச் ; தொல். செய். சூ. 155. (பிரதிபேதம்)1 மேவுகின்றலை, 2 கூறுவாளாய்க்குறியிடத், 3 கூறுவன போலே, 4. பெற்று ஒன்று மூன்றடியாக ஒன்று நான்கடியாய்
|