பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி309

(51). (1) (2) 1சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு
(3)மணற்சிற்றில் காலிற் சிதையா 2வடைச்சிய
(4) கோதை பரிந்து (5) வரிப்பந்து கொண்டோடி
(6)நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா

புறம். 54 : 5 - 8. (இ) "நின், சுரத்தலும் வண்மையு மாரியுள" பரி. 4 : 27. (ஈ) "வள்ளியோரின் வழங்கினமேகமே" கம்ப. ஆற்று. 4. (உ) "வையம் புரக்குமான் மன்னவநின் கைக்காரும், பொய்யின்றி வானிற் பொழிகாருங் - கையா மிருகார்க்கு மில்லைப் பருவ மிடிக்கு, மொருகார் பருவ முடைத்து" தண்டி. சூ. 37. மேற். (ஊ) "பொன்னங் குன்றின்மேலவன் கொடை போன்மெனப் பொழிந்த" நைடத. நாட்டுப். 2.

1. இச்செய்யுளின் ஆட்சியை இந்நூற்பக்கம் 312 : 3-ஆம் குறிப்பிற் காண்க.

2. (அ) "அஃறிணைப்பெயர் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்து விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராம்" என்பதற்குச் சேனாவரையரும் (ஆ) " அஃறிணைப்பெயர் அன்மொழியாய் உயர்திணைக்கண் வந்து விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராம்" என்பதற்கு நச்சினார்க்கினியரும்", (தொல். விளி. சூ. 3)
(இ) "அன்மொழித்தொகை ஒரு சொன்னீர் மைத்தாய்ப் பெயர்த்தன்மையெய்து, முடிக்குஞ் சொல்லோடு புணர்ந்துழி விளியாய் அல்வழிப் புணர்ச்சியாம்" என்பதற்கு இ - வி. நூலாரும் (இ - வி. சூ. 54.) "சுடர்த்தொடீ கேளாய்" என்பதை மேற்கோள் காட்டினர். அன்மொழித் தொகையும் ஆகுபெயருள் ஒருவகையென்பது முன்னோர் கொள்கை.

3. (அ) "முற்றிலைப்பந்தைக் கழங்கைக் கொண்டோடினை முன்னும்பின்னு, மற்றிலை தீமை யவைபொறுத் தோந்தொல்லை யாலினிளங், கற்றிலை மேற்றுயில் வேங்கடவா வின்றுன் கான்மலராற, சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெருவீட்டினைச் செய்தருளே" திருவேங்கடத். 97. ('ஆ) "முற்றிலான் மணற்கொழித்து மொய்த்தசிறு மியரிழைத்த, சிற்றிலா னவையவர்கள் சினந்தலறச் சிதைத்திட்டார்" திருவானைக்காப். கோச் செங்கணார். 189.

4. (அ) "கோதை வரிப்பந்து கொண்டெறிவார்" பரி. 9 : 47. (ஆ) "இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன். புன்றலை யோரி வாங்குநள் பரியவும்" குறுந். 229.

5. (அ) "வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா" பு - வெ. பாடாண். 50. "வரிப்பந்தசைஇ" பெரும்பாண். 333.

6. (அ) "அகப்பட்டி யாவாரைக் காணின்" (குறள். 1074) என்பதன் உரையில் அகப்பட்டி யென்பதற்குத் தன்னிற் சுருங்கிய பட்டியெனப்

(பிரதிபேதம்)1சுடர்த்தொடீ, 2அடர்ச்சிய.