பக்கம் எண் :

312கலித்தொகை

காட்சி யாசையிற் களம்புக்குக்கலங்கி" (1) கையற்றாற்போலத்தலைவனும் இருவகைக்குறியும் பிழைத்தலிற் றலைவியைக் காணானாய்க் காட்சியாசையிற் கலங்கி வேட்கையின் மயங்கினனாதலின் நம் மனைக்கண்ணே உண்டிக்காலத்தைக் கருதி வந்து தன் ஆற்றாமை மிகுதியான் இவளை முன்கைபற்றி நலிந்தான், இவளும் அதனை மறைத்துவிட்டாள், இனி இவட்கும் அவனைக்கூடுதல் கருத்தாயிருந்தது. இனி 1அவனைக் 2கூடுவளெனத் தோழி கருதுவளாதலின் வேறுமொருபொருள் நுதலிவந்ததாயிற்று.3

நோதக்கசெய்யுஞ் சிறுபட்டியென்றதனான் ஒருநிலமாயிற்று. (2) கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி யென்றதன்கட் கண்ணிற்குக் கொலைத்தொழில் கூறிற்று. இது வினையுவமத்தின்வகை.

இதனால், தோழிக்கு நினைத்தல் பிறந்தது.

"ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலால்" (3) என்பதனுள் இயலென்றதனாற் பன்னீரடியின் இகந்து ஒருபொருணுதலிவருங் கலிவெண்பாட்டும் உளவென்று கோடலின், இது பன்னீரடியின் இகந்து ஒருபொருணுதலிவந்த 4கலிவெண்பாட்டு. (15)

(52)முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று
மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்


1. தொல். கள. சூ. 16.

2. வினையுவமத்தின் ஒருவகைக்கு, "கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி" என்பதை மேற்கோள் காட்டினர் பேராசிரியரும்; தொல். உவம. சூ. 1.

3. தொல். செய். சூ. 153. நச். (அ) இச்சூத்திரவுரையில் இவ்விஷயத்திற்கும், (ஆ) தொல். செய். சூ. 160. பேர். உரையில் ஒருபொருணுதலிப் பதினாறடியான் வந்த கலிவெண்பாட்டிற்கும், (இ) தொல். செய். சூ. 160. நச். உரையில் ஒருபொரு ணுதலிப் பதினாறடியான் வந்த சீர்வகைக் கலிவெண்பாட்டிற்கும், (ஈ) யா - வி. சூ. 15. 85. உரையில் கலிவெண்பாவின் நேரீற்றியற்சீர்வந்ததற்கும், (உ) வெள்ளோசைகொண்டு ஒருபொருண்மேல் வெள்ளடியால் வந்த கலிவெண்பாவுக்கும், (ஊ) யா - கா. செய். 11. உரையில் வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருண்மேல் வந்த கலிவெண்பாவுக்கும், (எ) வீர. யாப்பு. 8. உரையில் நேரிசை வெண்பாவே போன்று அதனினீண்டுவந்த கலிவெண்பாவுக்கும், (ஏ) இ - வி. சூ. 738. உரையில் வெண்டளை தட்டுவந்த கலிவெண்பாவிற்கும் இச்செய்யுள் மேற்கோள்.

(பிரதிபேதம்)1அவனை, 2 கூட்டுவலென. கூடுதலென 3இதனால், 4கலிவெண்பாட்டாயிற்று. நோதக்கசெய்யுஞ்...................இது வினையுவமத்தின்வகை.