பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி329

இதனால், தலைவிக்குக் கைம்மிகல் பிறந்தது.

(1) சுரிதகத்து இருகாற் றோழி 1யென்றாள் நாணுத்தளையாக மறைகரந்தவாறு 2காத்த தோழிக்கு முகமனாக.

(2) விரல், ஆகுபெயர். பறாஅக் குருகு - பறவாக்குருகு, வெளிப்படை் விகாரம். புரையும,் (3) ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங்கெட்டது.

(4)இஃது 3அதனாலெனத்தனிச்சொற் 4பெற்று, அடக்கியலில்லாச் சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தோடிய 5பாநிலைவகைக் கொச்சகக் கலிப்பா. (18)

(55) மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற்
பொன்னகை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப்
போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை
யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய்
நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி;
6நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து
நுதலு முகனுந் தோளுங் கண்ணு
மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ
யைதேய்ந் தன்று பிறையு மன்று
10மைதீர்ந் தன்று மதியு மன்று
வேயமன் றன்று மலையு மன்று
பூவமன் றன்று சுனையு மன்று
மெல்ல வியலு மயிலு மன்று
சொல்லத் தளருங் கிளியு மன்று;
எனவாங்கு

தலைப்பா, டுண்மை செப்புங் கிளவி" (தொல். பொருளி.சூ.13). என அறத்தொடு நிற்றல் எழுவகையாம்.

1. இந்நூற்பக்கம் 327 : 1-ஆம் குறிப்பின் இறுதிபார்க்க.

2. விரலென்பது ஆகுபெயராய்க் கை யென்னும் பொருளுணர்த்தலை, ”படைகொ ணோன்விரல்" (முல்லை. 77) என்பதனுரையா லறிக.

3. தொல். வினை. சூ. 41. உரைபார்க்க.

4. "பாநிலை வகையே"என்னும் சூத்திரவுரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டி இக்குறிப்பையும் எழுதுவர் பே, நச், இருவரும்; தொல், செய், சூ, 155.

(பிரதிபேதம்)1என்ற னாணுத்தளையாக, 2தீரத்தோழிக்கு, 3. அதனானென, 4பெற்றவடக்கிய, 5பாநிலவகை