இதனால், தோழிக்கு நினைத்தல் பிறந்தது. "உயர்ந்ததன் மேறே்ற யுள்ளுங் காலை" (1)என்னுஞ்சூத்திரத்து உள்ளுங்காலையென்றதனாற் பிறையுமன்று, மதியுமன்று, மயிலுமன்று, கிளியுமன்றென்பன மறுத்தனவென்று கொண்டவுவமம்."முதலுஞ் சினையுமென்றாயிரு பொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய" (2) என்னுஞ்சூத்திரத்தில் நுதலிய மரபினென்றதனான் மலையுமன்று சுனையுமன்றென்பன, மலையோடுஞ் சுனையோடும் உவமைகருதாது மலையுள் வேயெழும் இடத்தையும் சுனையுட் பூவெழும் இடத்தையும் நோக்கி வேயையும் பூவையும் மறுத்துநிற்றலின், தோளையுங் கண்ணையும் உணர்த்திநின்றவென்று கொண்ட உவமம். இது தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும்பெற்று, 1"பாநிலைவகையே" (3) என்பதனால் அகப்பொருளின் கண்வந்த தரவிணைக் கொச்சகம். (19) (56) | ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி |
பயிறலும் அவன் நிகழ்த்தியவாறு கூறி, மதத்தாற் பரிக்கோ லெல்லையி னில்லாத களிறுபோல வேட்கைமிகுதியின் அறிவினெல்லையில் நில்லாதவனெனத் தீராத் தேற்றமும் ஒருவாற்றாற் கூறி, தனக்குப் பெருமை சான்ற இயல்பைப் பின்னொருகால் (தலைவி) தோழிக்குக் கூறியதென்பர். இவ்வுரைகாரர்; தொல். கள. சூ. 20. 1. தொல். உவம. சூ. 3. இச்சூத்திர வுரையிலே பேராசிரியர் "நுதலு முகனும்............ கிளியு மன்று" என்பதனை மேற்கோள்காட்டி "இவற்றுள், மலையுஞ்சுனையும் உவமையின்மையின் அவற்றைப் பிறையோடும் மதியோடும் உடன்வைத்து உவமைபோலக்கூறி எதிர்மறுத்தது என்னை? எனின், அவையாமாறு 'முதலுஞ் சினையும்' என்புழிச் சொல்லுதும்" என்பர். 2. தொல். உவம. சூ. 6. இதன் பேராசிரிய ருரையிலும் "வேயமன்றன்று மலையுமன்று" என்ற வழியும் மலைநோக்காது மலையுள்வே யெழுமிடங்கருதி அவ்விடமன்றென்ற வாறெனக்கொள்க. "பூவமன்றன்று சுனையுமன்று" என்பதற்கும் இஃது ஒக்கும்; என்னுங் குறிப்புக் காணப்படுகின்றது. 3. தொல். செய். சூ. 155. இதனுரையில் பே. நச். இருவரும் இங்ஙனமே இச்செய்யுளைத் தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவிணைக் கொச்சகத்துக்கு மேற்கோள் காட்டியுள்ளார். (பிரதிபேதம்)1பாநிலவகையி னென்பதனால்.
|