மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே |
எ - து; யான் ஒறுத்துக் கூறில் ஒறுப்பது புறத்துப்போதவிட்ட நும்முடைய சுற்றத்தாரை; நின்னையன்று; பின்னை இக்காமநோய் பொறுக்கலாம் அளவையுடைத்தன்றி மிகுமாயிற் பொன்னாற்செய்த குழையினையுடையாய்! யான் இங்ஙனம் வருந்துகின்ற நிலைமையைப் போக்கி இவ்வூரின் மன்றத்தின் கண்ணே மடலையேறி நீ எய்துவதொரு பழியை யான் உனக்கு நிறுத்துவேன் போலே இராநின்றேன், நீ அதனை 1அறி; எ - று. இது சொல்லெதிர்பெறாஅன் சொல்லியின்புற்றது. (1) அவளுந் தமருந் தீங்குசெய்தாராக அவளொடு தீங்கைப் புணர்த்தும் தான் ஏதஞ்செய்யாது உயிர்கொடுத்தானாகத் தன்னொடு நன்மையைப் புணர்த்தும் கூறியவாறு காண்க. அவன் இங்ஙனம் மிகுதி கூறுவான் மடலேறுவேன் போல்வலென ஐயுற்றுக்கூறினான். இதனால், தலைவற்கு அசைவென்னும் உவகை பிறந்தது 2இஃது ஆறடித்தரவும் நான்கடித்தாழிசையும் பொருள்பெறாத தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (22) (59). | தளைநெகிழ் பிணிநிவந்த பாசடைத் தாமரை முளைநிமிர்ந் தவைபோலு முத்துக்கோ லவிர்தொடி யடுக்கநா றலர்காந்த ணுண்ணேர்தண் ணேருருவிற் றுடுப்பெனப் புரையுநின் றிரண்டநே ரரிமுன்கைச் | 5 | சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் விளையாட வரிப்பெய்த வழகமை புனைவினை யாய்சிலம் பெழுந்தார்ப்ப வஞ்சில வியலுநின் பின்னுவிட் டிருளிய வைம்பால்கண் டென்பால வென்னைவிட் டிகத்தர விறந்தீவாய் கேளினி; |
1. தொல். அகத். சூ. 50. இச்சூத்திர வுரையில் இப்பாடலை மேற்கோள் காட்டி, தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மை கூறி, அவளது தீங்கெல்லாங் கூறுவான் மடலேறுவேன் போலுமென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கு இன்பமாதலிற் “சொல்லியின்புறல்” என்றார். என்பர். நச். இ - வி. உரைகாரரும் இ -வி. 589-ஆம் சூத்திரவுரையில் இதனை மேற்கோள்காட்டி இறுதி வாக்கியத்தை எழுதினர். (பிரதிபேதம்)1 அறியெனச் சொல்லெதிர் பெறான் சொல்லி யின்புற்றான் அவளும், 2இது ஒத்தாழிசைக்கலி.
|