நோக்கனோக்கம். ஏஎ ! இகழ்ச்சிக்குறிப்பு, “முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ, னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே.” (1) என்பதனான், எல்லாவிஃதொத்தன் எல்லாவென இருபாற்குமாய்நின்றது. இதனால், தலைவிக்கு நினைத்தல் பிறந்தது. இது கைகோள் இரண்டினுங் கூறத் தகாதனவாகப், பொருள் யாது நீ வேண்டியதென்றும், அருளியல் வேண்டுவல் யானென்றுங், கூறலிற் “காமஞ் சான்றவிளமையோ” (2) ளாக நிகழ்ந்த கைக்கிளையாம். இது தளைவிரவின நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டும் ஓரடியானொன்றும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டு மூன்றும் கொச்சகமும் ஓரடியானொன்றும் தனிச்சொல்லும் வெள்ளைச்சுரிதகமும் பெற்ற கொச்சகக்கலி. (25) (62). | ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு மேவேமென் பாரையும் மேவினன் கைப்பற்று மேவினு மேவாக் கடையு மஃதெல்லா நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற | 5 | மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லினெ னெல்லா தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று; | 9 | சுடர்த்தொடீ, போற்றாய்களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென றுண்பவோ நீருண் பவர்; | 12 | செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ வைவா யரவி னிடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை வௌவிக் கொளலு மறனெனக் கண்டன்று; | 16 | அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக் கூறுஞ்சொற் கேளா னலிதரும் பண்டுநாம் வேறல்ல மென்பதொன் றுண்டா லவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு. |
1. தொல். பொருளி. சூ. 26. இவருரையில் இதற்கு இப்பகுதிகள் மேற்கோள். இந்நூற்பக்கம் 370 : 1. (அ) 371 : 4. குறிப்புப்பார்க்க. 2. தொல். அகத். சூ. 50. இந்நூற்பக்கம் 372 : 4. (அ) குறிப்புப்பார்க்க.
|