14 | இஃதோ வடங்கக்கேள்; நின்னொடு சூழுங்கா னீயு நிலங்கிளையா வென்னொடு நிற்ற லெளிதன்றோ மற்றவன் றன்னொடு நின்று விடு |
எ - து: அது கேட்ட தோழி யான் கூறிய குற்றம் 1இதுவோ? இனி இது செய்யும்படியைச் சுருங்கக்கேள், நின்னோடு யான் இதனை ஆராயுங்காலத்து நீயும் (1)நாணத்தால் நிலத்தைக்கீறி என்னுடனே வேறுபட்டுநின்றநிலை செய்தற்கு எளிதன்றோ? இந்நிலையைப் பின்னை அவன் தன்னுடனே நின்று பார்த்து நின்னாற்செய்தலரிதன்றோ? என்றாள்; எ - று. இஃதோவென்றாள், “உடம்பட்டா ளென்னாமை யென்மெய் தொடு” என்றதனை. ஓகாரம், இது குற்றமன்றென மறையுணர்த்திற்று. இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை தோன்றிற்று. 2இஃது, எல்லா வெவன்செய்வாமெனவும்இஃதோ வடங்கக்கேளெனவும் வழியசைபுணர்த்த சொற்சீரடிகள் வந்து ஐஞ்சீரடுக்கிய வெண்பாக்களும்வந்த வெண்கலிப்பாட்டு. (28) (64). | அணிமுக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு மணிமுக மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண் விரிநுண்ணூல் சுற்றிய வீரித ழலரி யரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப வரும்படர் கண்டாரைச் செய்தாங் கியலும் விரிந்தொலி கூந்தலாய் கண்டை யெமக்குப் பெரும்பொன் படுகுவை பண்டு; | 8 | ஏஎ! எல்லா, மொழிவது கண்டை யிஃதொத்தன் றொய்யி லெழுதி யிறுத்த பெரும்பொன் படுக முழுவ துடையமோ யாம்; உழுதாய்; |
1. (அ) “களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா, நாணிநின்றோள்” அகம். 16 : 15 - 6. (ஆ) “சரணப் பெருவிரலா லொல்கிநின்று நிலங்கீறி, மைத்த குழலாண் மற்றவன்முன் மலர்மேன் மடந்தை யென நின்றாள்” இராமா. வரையெடுத்த. 9. (இ) “கெண்டை யுண்கணும் புறவடி நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள்” திருவிளை. திருமணப். 43. (பிரதிபேதம்)1இதுவே இனி, 2இது நல்லாயெவன் செய்வாயென வழியசைப்புணர்தத சொற்சீரடியும் வந்து.
|