எ - து: அதுகேட்ட தலைவன் நீ இங்ஙனம் வெறுத்துக்கூறிய கூறுபாடு நீங்கியகாலத்து, முத்தையொக்கும் முறுவலையுடையாய்! நீ முன்பு உற்ற பசப்பெல்லாம் இனி ஒருகாலமும் உறாதபடி கழித்துவிடுதற்கு வேங்கைப்பூவினது முற்றின அழகைக்கொண்ட சுணங்கணிந்த பூணினையுடைய ஆகத்தாலே பொய்த்தாகிலும் ஒருகால் முயங்கினையாய்ச் செல்வாயென்றான்; எ - று. பொன்னெல்லாம் உத்தியெறிந்துவிடவென்றதனால் வரைவேனென்றான்; இதனால் நீ கடவ பொன்னெல்லாம் பெற்றேனென்று கழித்துவிடுவேனென ஒரு நகைக்குறிப்புத் தோன்றிநின்றது. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை தோன்றிற்று. இது தரவும் ஐஞ்சீரடுக்கித் தளைவிரவின குறுவெண்பாட்டும் தனிச் சொல்லும் நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடுக்கிய நெடுவெண்பாட்டும் 1வழியசை புணர்த்த சொற்சீரடியும் குறுவெண்பாட்டும் வெள்ளைச் சுரிதகமும் பெற்று வந்த கலிவெண்பாட்டு. இதனுள் நிரையீற்றியற்சீர்ப்பின்னர் நிரைமுதல் வெண்சீரும் நேர்முதல்வெண்சீரும் வருதலின் அணிமுக மதியேய்ப்ப வம்மதியைநனியேய்க்கு (?) மென்பதுகட்டளையன்றாயிற்று. “நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை 2தட்பினும், வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப” (1) என்பதனால் உணர்க. (28) (65) | திருந்திழாய் கேளாய்நம் (2) மூர்க்கெல்லாஞ் சாலும் பெருநகை யல்க னிகழ்ந்த தொருநிலையே (3) மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்கு லந்துகிற் போர்வை யணிபெறத் தைஇநம் |
(இ) “முத்தேர் முறுவலாய்” கலி. 93 : 12, 97 : 6. (ஈ) ”முத்தேர் முறுவலார்” இனியது. 2. 1. தொல். செய். சூ. 60. இதனுரையிலும் “நிரையீற்றியற்சீர்ப் பின்னர் நிரைமுதல் வெண்சீரும் நேர்முதல்வெண்சீரும் முதல் வந்து பின்னர் வெண்சீரடுக்கிய வெண்டளை வரினும் சிறிது துள்ளலோசை பிறத்தலின் அதனைச் சீர்வகையடியென்றுணர்க” என்றுகூறி அதற்கு ‘அணிமுக.........................பின்னின்கண்’ என்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார் இவ்வுரையாசிரியர். 2. “உலகத் துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக், காமங் கைம்மிக வுறுதர” அகம். 258 : 12 - 4. 3. “துஞ்சூர் யாமத்தும்” ஐங்குறு. 13. (ஆ) “துஞ்சூர் யாமத்து” அகம். 360 : 12. (இ) “மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா, வென்னல்ல தில்லைதுணை” குறள். 1168. (ஈ) “ஊர்மடி கங்குல்” சிலப். 14 : (பிரதிபேதம்)1வழியசைப் புணர்த்த, 2தட்டல்வரை.
|