எ - து: என்று யாங்கள் காணும்படியாக; எ - று. ஆங்கு, அசை. 22 | அளிபெற்றே மெம்மைநீ யருளினை விளியாது (1)வேட்டோர் திறத்து விரும்பிய 1நின் பாகனு நீட்டித்தா யென்று கடாஅங் கடுந்திண்டேர் பூட்டு விடாஅ நிறுத்து |
2எ - து: நீ ஈண்டு வருதலாலே நினது அளியைப்பெற்றேம்; நீயும் எம்மை அருளினை; இதுவே அமையும்; இனி நீ விரும்பியோர்திறத்தே நீ செல்லுதலை விரும்பிய நின்பாகனும் பூட்டுதலைவிடாத கடிய திண்ணியதேரை நீ இவ்விடத்தே தாழ்த்தாயென்று கருதி அது நிற்கும் நிலையிலே செலுத்தும்; அதற்கு முன்னே சென்று அப்பரத்தையர் அன்பு கெடாமல் அவ்வன்பை 3நிறுத்துவாயாக; எ - று. | விளியாது நிறுத்து எனக் கூட்டுக. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (1) |
(67) | கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் னீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலுாரன்; |
6 | நலத்தகை யெழிலுண்க ணல்லார்தங் கோதையா லலைத்தபுண் வடுக்காட்டி யன்பின்றி வரினெல்லா புலப்பேன்யா னென்ே்பன்ம னந்நிலையே யவற்காணிற் கலப்பே னென்னுமிக் கையறு நெஞ்சே; |
1. "காம நிலையுரைத்தலும்" என்னும் தொல். கற்பியல், 36 - ஆம் சூத்திரத்தின் இவருரையில் "பாங்கன் கூறுவன நோய்மருங் கறிநருளடக்கிக் கொண்டு எடுத்து மொழியப்படுதலன்றிக் கூற்று அவணின்மை உணர்க; அது: 'வேட்டோர்...................... நிறுத்து' என[வும்] வரும்" என்பது காணப்படுகிறது; அதனைநோக்கப் பாங்கனே இங்குத்தேர்ப்பாகனா யிருந்தனனென்றுகொள்ள வேண்டுமென்று தோற்றுகிறது. இஃது ஆராய்தற்பாலது. (பிரதிபேதம்) 1நின்பாகனீ நீட்டித்தாயென்று 2எ - து என்று யாங்கள் காணும்படியாக நீ யீண்டு, 3நிறுத்துவாயென்றாள் விவியாது நிறுத்தெனமாறுக இதனால்.
|