20 | நனவினான் வேறாகும் வேளா முயக்க 1மனைவரிற் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட வினைய ரெனவுணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக் (1)கனவினா னெய்திய செல்வத் 2தனையதே (2)யைய வெமக்குநின் மார்பு |
எ - து; எம்மனைக்கண்ணே நீ ஒருகாலத்தே 3வந்தாயாயின் நின்னைப் பெற்று மகிழ்ந்து நீ நீங்கிய பின் எந் தோள் மெலிகையினாலே அதனை உணர்ந்தவர்கள் இக்காலத்து இவளும் 4இவரும் இத்தன்மையராயினாரென்று புறங்கூறுதலின் அக்கூற்றை யாம் ஏற்றுக்கொண்டு பழையநிலையைப் பெறுதற்கு ஏக்கற்று முயங்குமாறுபோலே வியக்கத்தக்க நின் மார்பினிடத்தே முயங்கினும் உண்மையிடத்து வேறாயிருக்கும் நீ விரும்பாத முயக்கம் எமக்குக் கனவின்கண் வரப்பெற்ற செல்வத்தையொப்ப தொன்றாய் இருக்கும்; எ - று. இதனாற் பயனின்றென ஊடினாள் 5நனவினான் கனவினானென்பன, இடப்பொருள், நனவு-உண்மை; கனவு-பொய். ஐயென்னும் உரிச்சொல், ஐயவென ஈறு 6திரிந்தது. இது மெய்யன்றிப்பொய்யாகக்கோடலிற் (3)பொய்யாக்கோடலென்னு மெய்ப்பாடு. இஃது 7ஈரடிமிக்க தாழிசையும் வருதலிற்கொச்சகம். (3) (69) | போதவிழ் பனிப்பொய்கைப் புதுவது தளைவிட்ட தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறஞ்சேர்பு காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய மாதர்கொண் மானோக்கின் மடந்தைதன் றுணையாக |
1. (அ) "கனவுகண்டது நனவினெய்துத, றேவர் வேண்டினு மிசைதல் செல்லாது, காவ லாள கற்றோர் கேட்பிற், பெருநகை யிதுவெனப் பேர்த்துரை கொடாஅ" பெருங். (4) 7 : 110 - 3. (ஆ) "செம்பொன் கனவினாற் காண்டல் கைப்புகுமோ" இருசமய. (3) 1 : 1. 1. (இ) "கண்டகனாவின் பொருள்போல யாவும் பொய்" திருவரங்கத். 42. 2. "ஐவியப்பாகும்" தொல். உரி. சூ. 87. 3. பொய்யாக்கோடலென்பதற்கு மெய்யைப் பொய்யாக்கோடலென்று பொருள்கூறி அம்மெய்ப்பாட்டிற்கு, "கனவினா னெய்திய..................மார்பு" என்பதை மேற்கோள் காட்டினர், பேராசிரியரும்; தொல். மெய்ப். சூ. 22. இ - வி. உரைகாரரும் இதனையே பின்பற்றினர்; இ - வி. சூ. 580. (பிரதிபேதம்) 1மணைவயிற்பெற்று, 2இனைஇயதே, 3வந்தாயினிநின்னை, 4இவனுமித்தன்மை, 5கனவினா னென்பன இடப்பொருட்டு நனவுகனவுண்மைபொய், 6திரிந்தது மெய்யன்றிப் பொய்யாகக் கொண்டலிற் பொய்யாகக் கொண்டலெனும் மெய்ப்பாடு, 7ஈரடித்தாழிசை.
|