பக்கம் எண் :

மூன்றாவது மருதம்427

(71)விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட்
டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார
5வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு
நனிவிரைந் தளித்தலி னகுபவண் முகம்போலப்
பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர;
9 ஓருநீ பிறரில்லை யவன்பெண்டி ரெனவுரைத்துத்
தேரொடுந் தேற்றிய பாகன்வந் தீயான்கொ
லோரிற்றான் கொணர்ந்துய்த்தார் புலவியுட் பொறித்தபுண்
பாரித்துப் புணர்ந்தநின் பரத்தைமை காணிய;
13மடுத்தவன் புகுவழி மறையேனென் றியாழொடு
மெடுத்துச்சூள் பலவுற்ற பாணன்வந் தீயான்கொ
லடுத்துத்தன் பொய்யுண்டார்ப் புணர்ந்தநின் னெருத்தின்க
ணெடுத்துக்கொள் வதுபோலுந் தொடிவடுக் காணிய;
17தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின்
குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி
யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய;
என்றுநின்;
22தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்நீ வருநாட்போ லமைகுவம்யாம் புக்கீமேர
மாரிக் கவாவுற்றுப் பீள்வாடு நெல்லிற்காங்
காராத் துவலை யளித்தது போலுநீ
யோர்யாட் டொருகால் வரவு.

இது பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனது வரவுகண்டு ஊடியகாமக்கிழத்தி ஊடியவாறுகண்டு சென்று சார்ந்த தலைவனுடன் அவள் ஊடல் தீர்கின்றாள் கூறியது.

இதன் பொருள்.