என்றுநின் 22 | தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார்நீ வருநாட்போ லமைகுவம்யாம் புக்கீமோ (1) மாரிக் கவாவுற்றுப் (2) பீள்வாடு நெல்லிற்காங் காராத் 1துவலை யளித்தது போலுநீ யோர்யாட் டொருகால் வரவு |
எ - து: இங்ஙனம் நின்னன்புநீங்காதமுயக்கத்தை என்றும் பெறுகின்ற பரத்தையரை வெறுப்பார் யார்? நீ ஓர் யாண்டிடத்து ஒருகால் வருகின்ற வரவு எமக்கு மழைக்கு அவாவுற்றுத் தோன்றின 2கதிர் உலரும் நெல்லிற்கு அப்பருவத்தே நிறையப்பெய்யாதே ஆராத சிறுதுவலையைப் பெய்த தன்மை போல மிக்க வருத்தத்தைத் தரும்; ஆதலான் நீ வருநாட்போல யாம் ஆற்றியிருப்பேம்; நீ அவர் வருந்தாமல் அவர்மனைக்கட் செல்வாயாக. எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை தோன்றிற்று. இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (6)
(72) | இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட் டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணையசைஇச் சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி யூடுமென் சிறுகிளி யுணர்ப்பவண் முகம்போலப் புதுநீர புதலொற்றப் புணர்திரைப் பிதிர்மல்க மதிநோக்கி யலர்வீத்த வாம்பல்வான் மலர்நண்ணிக் கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின் வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர; | | கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப் பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டென்றானோ |
1. (அ) "சாலிகள் வளரு மெல்லைத் தடம்புனல் வறுமைத் தாக, வாலிது குரல் வாங் காது வருத்தொடு மாய்வதே போன்மேலவ னருளாற் போகம் வெறுத்தலிற் கருமல் கின்றிஞாலமன் னுயிர்கண் முற்று நாடொறுங் குறைந்த வன்றே" கந்த. மேருப். 28. என்பதும் (ஆ) "உலகங், கயங்க ணற்ற பைதறு காலைப்பீளொடு திரங்கிய நெல்லிற்குநள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே" நற். 22 : 8 - 11. என்பதும் இங்கே அறிதற்பாலன.
2. (அ) "பீள்விரிந் திறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி" அகம். 243 : 6. (ஆ) "பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட" நாலடி. 269.
(பிரதிபேதம்) 1திவலை, 2கதிரலரும்.
|