பக்கம் எண் :

442கலித்தொகை

செய்யாநின்றாயென்று கூறுவாரில்லாத இடத்தே அடிமுன்னே பணிந்து எம்மை ஊடலுணர்த்துதற்கு வருவாய்; அதனாற்பெற்றதென்? எ - று.

"பயங்கெழு 1துணையணை புல்லிய புல்லா, துயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கென முன்னிய நிறையழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய விரவினும்" (1) என்பதனான் முன்னடிப்பணிந்தென்றார்.

2எனவாங்கு, அசை.

19 மண்டுநீ ராரா மலிகடல் போலுநின்
றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி 3மற் றியாமெனிற்
றோலாமோ நின்பொய் மருண்டு.

எ - து: யாற்றினின்று மிக்குச்சென்றுவீழ்கின்ற நீரால் நிறையாத மிகு கடல்போலும் நின் அமையாத 4பரத்தைமை மேலிடுகையினாலே நாடோறும் நின்னொடு புலக்குந் தகுதியையுடைய பெண்டிரைத் தெளிவிப்பாய்; பின்னை யாமாயின் நின்பொய்யை மெய்யாக நினைந்து நினக்குத் தோலாதிருப்பேமோ? தோற்பேமன்றோ? என்று எங்கையர்க்கு உரையென்றாள். எ - று.

இதனால், தலைவிக்கு முனிவு பிறந்தது.

இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (8)

(74) பொய்கைப்பூப் புதிதுண்ட வரிவண்டு கழிப்பூத்த
நெய்தற்றா தமர்ந்தாடிப் பாசடைச் சேப்பினுட்
செய்தியற்றி யதுபோல வயற்பூத்த தாமரை
மைதபு கிளர்கொட்டை மாண்பதிப் படர்தரூஉங்
கொய்குழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர;
6 அன்பில னறனில னெனப்படா னெனவேத்தி
நின்புகழ் பலபாடும் பாணனு மேமுற்றான்;
8 நஞ்சுயிர் செகுத்தலு மறிந்துண்டாங் களியின்மை
கண்டுநின் மொழிதேறும் பெண்டிரு மேமுற்றார்;
10 முன்பகற் றலைக்கூடி நன்பக லவணீத்துப்
பின்பகற் பிறர்த்தேரு நெஞ்சமு மேமுற்றாய்;

1 தொல். கற்பி. சூ. 5. இச்சூத்திரத்தின் இவருரையில் மெல்லென் சீறடி புல்லிய இரவினைத் தலைவிகூறியதற்கு 'என்னை நீ செய்யினும் ................. வந்துரையாக்கால்' என்னும் இப்பகுதி மேற்கோள்.

(பிரதிபேதம) 1துணையனைப் புல்லிப் புல்லா, துயங்குவள்...............குறுகி, யலகன முன்னிய நிறை, 2ஆங்ககை மண்டு, 3மற்றியாமேற், 4பரத்தமை.