பக்கம் எண் :

446கலித்தொகை

கண்ணினையுடைய 1பரத்தையர்க்கும் அவர்கள் அகப்படுத்தற்குக் காரணமான வலை இதுவென்று சொல்லி ஊரிலுள்ளார் சேரச் சிரிக்கும்படி திரிதருந்தேர் நின்னினும் பெரிதாகப் பித்தேறிற்று; யான் 2பித்தேறிலேனென்று ஊடினாள்.
எ - று.

தேரென்றது, 3ஆகுபெயராய்ப்பாகனையுணர்த்திற்று.
இதனால், இருவர்க்கும்புணர்ச்சியுவகை பிறந்தது.
இதுசிறுமைக்கெல்லைகூறிய ஈரடித்தாழிசையான்வந்த ஒத்தாழிசைக்கலி

(75.) (1) நீரார் செறுவி னெய்தலொடு நீடிய
நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார்
சீரார் சேயிழை யொலிப்ப வோடு
மோரை மகளி ரோதை வெரீஇயெழுந்
5தார லார்கை யஞ்சிறைத் தொழுதி
யுயர்ந்த பொங்க ருயர்மர மேறி
யமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய்
தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று
முயர்ந்த போரி னொலிநல் லூரன்
10 புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின்
வதுவை நாளால் வைகலு மஃதியா
னோவேன் றோழி நோவாய் நீயென
வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென;
14எல்லினை வருதி யெவன்குறித் தனையெனச்
சொல்லா திருப்பே னாயி னொல்லென
விரியுளைக் கலிமான் றேரொடு வந்த
விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும
18 வாடிய பூவொடு வாரலெம் மனையென
வூடி யிருப்பே னாயி னீடா
தச்சா றாக வுணரிய வருபவன்
பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்;

1. இச்செய்யுள் கற்பின்கண் தலைவிகூற்றுப் பெட்பின்கண் வந்ததற்கு மேற்கோள்; தொல். கற்பி. சூ. 6. இளம். நச்.

(பிரதிபேதம்) 1பரத்தையர்க்கவர்களகப், 2பித்தேறிற்றிலே னென்று, 3ஆகுபெயராந் பாகனை, இதனால்.