பக்கம் எண் :

456கலித்தொகை

இது தலைவி தோழிக்குக் கூறியது.

"பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉ, நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற், றுணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்,துணையோர் கரும மாகலான" (1) என்பதனான் வினவுதியாயினென நாட்டம் நிகழ்ந்தவாறும் சுரிதகத்துக் கூட்டங் கூறித்துணைச்சுட்டுக் 1கிளவி கிழவியதாயவாறுங்காண்க.

இதனால், தலைவிக்கு அச்சம் நிகழ்ந்தது. இதனைத் தோழி கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.

இஃது 2ஆசிரியத்தளையுங் கலித்தளையும் விரவி ஐஞ்சீரடி வந்த வெள்ளைச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. "வெண்பாவியலினும் பண்புற முடியும்" (2) என்பதனால் வெள்ளைச்சுரிதகத்தாலிற்றது. இது "வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு, மைஞ்சீ ரடியு முளவென மொழிப" (3) என்பதனான் ஐஞ்சீரடியும் வந்தது. (11)

(77.) இணையிரண் டியைந்தொத்த முகைநாப்பட் பிறிதியாதுந்
துணையின்றித் தளைவிட்ட தாமரைத் தனிமலர்
திருமுக மிறைஞ்சினள் வீழ்பவற் கினைபவ
ளரிமதர் மழைக்கண்ணீ ரலர்முலைமேற் றெறிப்பபோற்
5 றகைமலர்ப் பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி
மிகநனி சேர்ந்தவம் முகைமிசை யம்மல
ரகவிதழ்த் தண்பனி யுறைத்தரு மூரகேள்;
8 தண்டளிர்த் தகைபூத்த தாதொழி னலஞ்செலக்
கொண்டுநீ மாறிய கவின்பெறல் வேண்டேன்ம
னுண்டாதல் சாலாவென் னுயிர்சாத லுணர்ந்துநின்
பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகற்பின்;
12 பொன்னெனப் பசந்தகண் போதெழி னலஞ்செலத்
தொன்னல மிழந்தகண் டுயில்பெறல் வேண்டேன்ம
னின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைக
ளென்னுழை வந்துநொந் துரையாமற் பெறுகற்பின்;

1. தொல். கள. சூ. 32. இச்சூத்திரத்தின் இவருரையில் "புனையிழை நோக்கியுமென்னும் மருதக்கலியுள் ‘வின்வதியாயின்’ என நாட்டம் நிகழ்ந்தவாறும் அதன் சுரிதகத்துக் கூட்டமுண்மை கூறுதலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாயவாறுங் காண்க" என்பது காணப்படுகிறது.

2. தொல். செய். சூ. 77.

3. தொல். செய். சூ. 63.

(பிரதிபேதம்) 1கிளவியதாயவாறும், 2ஆசிரியத்தளையும் விரவி ஐஞ்சீரடியும்.