பக்கம் எண் :

மூன்றாவது மருதம்471

அவன் அணியைச் சிதைப்பானொருவனாயிருப்பான்; ஆதலால் எம்புதல்வனை (1) இங்கேதந்து அப்பரத்தையர்சேரியிலே அங்ஙனங்குறிக்கொண்டபரத்தைய ரிடத்தே செல்வாயாக. எ - று.

'ஈங்கெம் புதல்வனைத் தந்து' என்றது (2) தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது.

(இதனால்) தலைவற்குக்கைம்மிகலுந் தலைவிக்கு இளிவரலும் பிறந்தது.

1இது தரவும் தாழிசையும் அசைநிலைத் தனிச்சொல்லும் கட்டளையாகிய வெள்ளைச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிகைக்கலி. (14)

(80.) (3) நயந்தலை மாறுவார் மாறுக மாறாக்
கயந்தலை மின்னுங் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தவெங் கண்ணார யாங்காண நல்கித்
திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇப்
5 பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழ மறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றிற் பைபய வாங்கி
யரிபுனை புட்டிலி னாங்கணீர்த் தீங்கே
வருகவெம் பாக மகன்;
10 கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லுந்
தளர்நடை காண்ட லினிதுமற் றின்னாதே
யுளமென்னா நுந்தைமாட் டெவ்வ முழப்பார்
வளைநெகிழ் பியாங்காணுங் கால்;
14 ஐய, காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின்
றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே

1. இவ்வுரைகாரர் "ஒழிககாம மீங்கென" சீவக. 72. என்பதன் விசேடவுரையில் "ஈங்கு: தன்மையை உணர்த்துதல், 'செலவினும் வரவினும்' என்னும் (தொல். கிளவி. 28) சூத்திரத்துக் கூறினாம்" என்று எழுதி யிருத்தலும், அச்சூத்திரத்தின் உரையில், ஈங்கு முதலியன தன்மைக்கண்ணும் ஆங்குமுதலியன படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன" என்று எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

2.தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தற்கு "அணியொடு வந்தீங்கெம்.........................புதல்வனைத் தந்து" என்பது மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 6.

3. பல்வேறு புதல்வர்க்கண்டு நனியுவந்து கூறினதற்கு இச்செய்யுள் மேற்கோள்; தொல். கற்பி. சூ. 10.

(பிரதிபேதம்)1இது அசைநிலைத்