பக்கம் எண் :

476கலித்தொகை

றாதுதேர் வண்டின் 1கிளைபாடத் தைஇய
கோதை பரிபாடக் 2காண்கும்

எ - து: ஐயனே! எம்முடைய காதிற் பொன்னாற்செய்த மகரக்குழையை வாங்கிக்கொண்டுபோய் எம்மிடத்தே மீண்டுவருந்தோறும் எம்முடைய பூ இல்லாத வறுவிய கூந்தலிலே நின்னை யாங்கள் வைத்துக்கொள்வது நுந்தை அகற்சியையுடைய மார்பிற் கோதையை அறுத்து நீ விளையாடுதற்கு; நீ அங்ஙனம் விளையாடினால் 3யாமும் எமக்குப் பகையாயவரிடத்து அவன் வைத்த அன்பு தேயக் 4காண்போம், எ - று.

இனி, ஏதிலார் இடஞ்சாயக் 5காண்போமென்றுமாம்.

தாதைத் தேடும் வண்டின் சுற்றம் விழும்படி கட்டின 6கோதை.

(இதனால்) தலைவிக்கு இழிவும் தலைவற்குக் கைம்மிகலும் பிறந்தது.

இது தரவு வெண்பாவாய் ஏனைவெண்பாக்கள் ஐயவென்பதனோடுங் கூடி ஐஞ்சீரடுக்கிவருதலிற் கலிவெண்பாட்டு. "தரவும்போக்கும்" எனப் போக்கினைத் தரவோடு கூறியவதனால், தரவிறுதி போல இது 7காண்கும் எனத் (1) தேமாவாலிற்றது. (15)

(81.) மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன்
மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தரப்
பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை யுருள்கல
னலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர
5 வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகி
லரிபொலி கிண்கிணி யார்ப்போவா வடிதட்பப்
பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக்
கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா
வாலமர் செல்வ னணிசால் பெருவிறல்
போல வருமென் னுயிர்;

1. வெள்ளைச்சுரிதகம் ஒரோவழிச் சீரானிறுமென்றுகூறி அதற்கு "ஐய, எங்.................காண்கும்" என்பதை நச்சினார்க்கினியரும் "தாதுதேர் வண்டின்...........காண்கும்" என்பதைப் பேராசிரியரும் மேற்கோள் காட்டிச் சிறிதுவேறுபட இக்குறிப்பையுமெழுதியுள்ளார். தொல். செய். சூ. 154.

(பிரதிபேதம்)1கிளைபட, 2 காண்கு, 3யானும், 4காண்பேனெனக் கூறினாள்இனி, 5காண்பே னென்றுமாம். தாதைத்தேடும், 6கோதைதலைவிக்கு இளியும், 7காண்குயெனத்தேமாவால்.