பக்கம் எண் :

486கலித்தொகை

ளாயிற்று. மறுத்தர வில்லாயி னெனவே இறந்துபடுவனென்று 1துனி தீர்ந்தாள் "கரணத்தி னமைந்து" என்னும் (1) சூத்திரத்தில், "சென்றுகை யிகந்து பெயர்த் துள்ளிய 2வழியும்" என்பதனான் உணர்க.

இதனால், தலைவிக்கு எள்ளலும் தலைவற்கு அசைவும் பிறந்தது.

இது "வெளிப்பட" (2) என்றதனால், இயற்சீர்நிரையொன்றிப் பாவேறு பட்ட தரவும் போக்கும் ஐஞ்சீரடுக்கிவந்த மாட்டும் வந்த கலிவெண்பா. (16)

(82.) ஞாலம் வறந்தீரப் பெய்யக் குணக்கேர்பு
காலத்திற் றோன்றிய கொண்மூப்போ லெம்முலை
பாலொடு வீங்கத் தவநெடி தாயினை
புத்தேளிர் கோட்டம் வலஞ்செய் திவனொடு
புக்க வழியெல்லாங் கூறு;
6 கூறுவேன், மேயாயே போல வினவி வழிமுறைக்
காயாமை வேண்டுவல் யான்;
காயேம்;
9 மடக்குறு மாக்களோ டோரை யயரு
மடக்கமில் போழ்தின்கட் டந்தைகா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளு
மருப்புப்பூண் கையுறை யாக வணிந்து
பெருமா னகைமுகங் காட்டென்பாள் கண்ணீர்
சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன மற்றும்
15 வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளு
மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து
முயங்கினண் முத்தின ணோக்கி நினைந்தே

1. தொல். கற்பியல். சூ. 5. இச்சூத்திரப் பகுதிக்கு, தலைவன் ஆற்றானாய்த் துனியைத்தீர்த்தற்கு அவளை அணுகச்சென்று, அவன் மெய்க் கட்கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கிநிறுத்தலானே அவன் ஒருவாற்றான் அவளாற்றாமையைச் சிறிது மீட்கையினாலே அவள் கூடக்கருதிய விடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்று பொருள் கூறி, "அதிர்வில்..................நாம்" என்ற பகுதிகளை மேற்கோள் காட்டினர்; இவ்வுரைகாரர்.

2. தொல். செய். சூ. 155.

(பிரதிபேதம்) 1துனிதீர்ந்தாள் நாமென்றது, 2வகையாலுணர்க.