பக்கம் எண் :

மூன்றாவது மருதம்497

இதனால், தலைவிக்கு இளிவும் தலைவற்குக் கைமிகலும் பிறந்தது.

இது தளைவிரவி ஐஞ்சீரடியும் வந்த வெள்ளைத்தரவும் தனிச்சொல்லும் தளைவிரவின வெண்பாவும் ஐஞ்சீரடுக்கிய வெள்ளைச்சுரிதகமும் பெற்ற கலிவெண்பா. (18)

(84.) உறுவளி தூக்கு முயர்சினை மாவி
னறுவடி யாரிற் றவைபோ லழியக்
கரந்தியா னரக்கவுங் கைநில்லா வீங்கிச்
சுரந்தவென் மென்முலைப் பால்பழு தாகநீ
5 நல்வாயிற் போத்தந்த பொழுதினா னெல்லா
கடவுட் கடிநகர் தோறு மிவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள்
யாரிற் றவிர்ந்தனை கூறு;
10 நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ
விவன்மன்ற யானோவ வுள்ளங்கொண் டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென் றகனகர்
வாயில் வரையிறந்து போத்தந்து தாயர்
15 தெருவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற்
கொத்தவை யாராய்ந் தணிந்தார் பிறன்பெண்டி
ரீத்தவை கொள்வானா மிஃதொத்தன் சீத்தை
செறுதக்கான் மன்ற பெரிது;
20 சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீதொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு;
22 அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ்
செறியாப் பரத்தை யிவன்றந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வ லென்பது தன்னை
யறீஇய செய்த வினை;