பக்கம் எண் :

520கலித்தொகை

வரையிலே சிங்கம் பாய்ந்தாற்போல அறனில்லாத தந்தையுடைய அகன்ற மார்பிலே 1பாய்ந்தானென்றாள். எ - று.

இது மகப்பழித்து நெருங்கியது. அன்பிலி பெற்ற மகனென (1) அவன் வயிற் 2பிரித்தவாறுங் காண்க. அறனில்லாவென்றது, ஆங்கு நெஞ்சழிதல்.

இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.

இஃது ஆங்கவெனத் தனிச்சொற்பெற்று ஐஞ்சீரடுக்கி வந்த கலி வெண்பா. (21)

(87.)

ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை
வெரூஉதுங் காணுங் கடை;

3

தெரியிழாய், செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய்
மெய்பிரிந் தன்னவர் மாட்டு:

4

ஏடா, நினக்குத் தவறுண்டோ நீவீடு பெற்றா
யிமைப்பி னிதழ்மறை பாங்கே கெடுதி
நிலைப்பா லறியினு நின்னொந்து நின்னைப்
புலப்பா ருடையர் தவறு;

9

அணைத்தோளாய், தீயாரைப்போலத் திறனின் றுடற்றுதி
காயுந் தவறிலேன் யான்;

11

மானோக்கி நீயழ நீத்தவ னானாது
நாணில னாயி னலிதந் தவன்வயி
னூடுத லென்னோ வினி;

14

இனியாது மீக்கூற்றம் யாமில மென்னுந்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனியானாப்
பாடில்கண் பாயல் கொள.

இது பரத்தையர்சேரிச் சென்றமை அறிந்திலளெனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்துகூறித் தோழி வாயிலாக ஊடறீர்வாள் தன் னெஞ்சொடு கூறியது.

இதன் பொருள்.


1. தலைவி தன்னொடு மைந்தனிடை உறவுநீக்கி, அவனைத் தலைவனொடு சார்த்திக் கூறுதலாகிற அவன்வயிற் பிரிப்பு
என்பதற் கு மறைநின்று............................மகன் என்னும் பகுதியை மேற்கோள்காட்டி, அறனில்லா வன்பிலி பெற்ற மகனெனப் பிரித்தவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர்; தொல். கற்பி. சூ. 6. 

பிரதிபேதம்) 1. பாய்ந்தானெனமகப்பழித்துநெருங்கியவாறும் அன்பிலி, 2. பிரிந்தவாறுங்