பக்கம் எண் :

530கலித்தொகை

களவுபோலச் சூளுறுதலின், தொல்சூ ளாயிற்று; இதனுள் (1) இரத்தலும் தெளித்தலும் வந்தவாறுணர்க.

இதனால், தலைவிக்கு அணங்கால் அச்சம் பிறந்தது; தலைவற்குப் புணர்வாகிய உவகை பிறந்தது.

இஃது (2) ஒரூஉவென ஒழியசையாகிய சொற்சீரடிவந்து ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய்பெற்றும் வந்த கலிவெண்பா. "தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும்" (3) எனப் பாப் போக்கின்பின் 1. வைத்ததனாற் ‘கடியர்தமக் கியார் சொல்லத் தக்கார் மாற்று’ எனப் போக்குட்போல் நாற்சீரான் இறும் பாட்டும் வந்தது. (23)

(89.)யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோ
ரூராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை
வாரனீ வந்தாங்கே மாறு;
4என்னிவை, ஓருயிர்ப் புள்ளி னிருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவனீ கூறினென்;
னாருயிர் நிற்குமா றியாது;
7ஏஎ, தெளிந்தேம்யாங் காயாதி யெல்லாம்வல் லெல்லா 
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு 
வருந்தனின் வஞ்ச முரைத்து;
10மருந்தின்று, மன்னவன் சீறிற் றவறுண்டோ நீநயந்த 
வின்னகை தீதோ விலேன்;
 
12மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் 
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் 
பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினே 
னென்றடி சேர்தலு முண்டு. 

1. இரத்தலுந் தெளித்தலும் வந்தமைக்கு, இச்செய்யுள் மேற்கோள்; தொல். அகத். சூ. 44. ‘ஒன்றாத் தமரினுந்’ இளம். சூ. 41. நச். 

2. தொல். செய். 123-ஆம் சூத்திர வுரையில் 

(அ) "ஒரூஉ.................தவர்" என்பதை மேற்கோள்காட்டி, ‘ஒரூஉ வென 

நின்ற இயலசைதானே ஒழியசையாய் நின்றது’ என்று பேராசிரியரும் 

(ஆ) "ஒரூஉக் கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற" என்பதை மேற்கோள்காட்டி, ‘ஒரூஉ வென நிரையசைதானே ஒழியசையாயிற்று’ என்று நச்சினார்க்கினியரும் கூறியுள்ளார். 

3. தொல். செய். சூ. 154.

(பிரதிபேதம்) 1. வைத்ததனாற் சொலத்தக்கார்.