இனி, (1)கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றுமாம், புணர்தம்மின்: "நல்லெயி லுழந்த 1செல்வர்த் தம்மின்” (2) என்றாற்போலத் திரிசொல். இஃது, 2“உறலருங் குண்மையி னூடன் 3மிகுந்தோளைப், பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்” (3)என்பதனாற் பிறபிற பெண்பால் காட்டி 4ஊடறீர்த்தது, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி கூறி, மகளிரும்மைந்தரும் விருந்தெதிர்கொண்டு அணியயர்வர்; நாமும் 5அது செய்ய வேண்டுமென்றவாறு காண்க. இதனால், தலைவற்குக் கனவு முதற் றோன்றிப் பின்னர் விரைவு தோன்றிற்று. இது “யாறுங் குளனுங் காவு மாடி” என்னுஞ் (4) சூத்திரத்தாற் காவிற் புணர்ந்திருந்தாட நீயுங் கருதெனத் தலைவிக்குக் 6கூறியது. இஃது ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய்பெற்றும் வந்த கலிவெண்பா; ஆசிரியத்தளையும் வந்தது. (27) (93). | வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய தண்டாத்தீஞ் சாயற் பரத்தை வியன்மார்ப |
1. (அ) "வடதிரு வால வாய்திரு நடுவூர்....................கன்னிசெங் கோட்டங் கரியோன் றிருவுறை” கல். 61. (ஆ) "காய்சின மயிடற் காய்ந்த கன்னிமுன், காக்கு மூதூர்" (இ) "கனகவெண் சங்கச் செங்கைக் கரியமால் காக்கு மூதூர்” (ஈ) "சீருடைக் காளி நாமச் செல்விமுன் காக்கு மூதூர்” (உ) "ஆலவாய்த் தரும மூர்த்தி, யெந்நிலத் தினுமுயர்ந்த திந்நில மென்று தோன்ற, மன்னுமைக் குரைத்து மற்றை மாதிரங் காக்கு மூதூர்” திருவால. திருநகரச்சிறப்பு. 12 - 15. 2. மது. 731. 3. (அ) தொல். கற்பி. சூ. 5. இதனுரையில், தலைவன், பிறபெண்டிரேதுவாக ஊடன்மிக்கவளை ஊடலுணர்த்தியதற்கு, "ஒருத்தி புலவியாற்.................அகலம்புகும்” என்பதை மேற்கோள் காட்டினர் இளம்; (ஆ) "நச்சினார்க்கினியர் இதனோடு அன்னவகையால்...............கொண்டு” என்பதையுஞ்சேர்த்துக்காட்டி, ‘புல்லாதிருந்தா ளென்றதனான்ஊடன் மிகுதி தோன்றுவித்து, மகளிருமைந்தரும் வேனில் விழாச்செய்கின்றார்; நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியவாறுகாண்க’ என்றனர். 4. தொல். கற். சூ. 50. (அ) இச்சூத்திரத்தின் இவருரையில் இச்சுரிதகம், காவிற் புணர்ந்திருந்தாட நீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியதற்கு மேற்கோள். (ஆ) தொல். புறத்.சூ. 32. இவருரையில், “இதனுள் ஆறுகூறினார்; 'புனவளர் பூங்கொடி’ என்னு மருதக் கலியுமது” என்று காணப்படும் பகுதி இங்கே ஆராய்தற்பாலது. (பிரதிபேதம்)1செல்வந்தம்மின், 2உறலருங்குடைமையின், உறலருங்குரைமையின், 3மிகுத்தோளை, 4ஊடறீர்த்தான், 5அது வேண்டுமென்ற வாற்றாற்காண்க, 6கூறினான் இது முச்சீரடுக்கியும்.
|