விடாஅது நீயெம்மில் வந்தாயவ் வியானை கடாஅம் படுமிடத் தோம்பு. எ - து: சார்ந்த சார்ந்த இடங்களிலுள்ள அறல்தங்கின கரிய கூந்தலை யுடைய நின் பெண்டிரெல்லாரும் நின்னைக் கோபியாதபடி எம்முடைய இல்லிலே வந்தாய்; 1அதற்கு அப்புத்தியானை நீ ஏறமாட்டாத (1)பாகனாம்படியாக நின்னைக் கைகடந்து மதம்படும்; அவ்விடத்து விடாதே அதனை மெல்லெனப் பரிகரித்துக்கொள்ளெனப் புலந்து கூறினாள். எ - று. புதிய பரத்தையரை 2புணர்தற்கு ஏனைப் பரத்தையர் கோபியாதபடி அதற்குப் பரிகாரமாக 3ஈண்டுவந்து என்பால் அடைந்தாய்; தலைவி மனைக்கண் தங்கினானென்று அவர் கருதுவாராக நினைத்தாயென்றாள். இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது . இது தரவுகொச்சகங்களும் சொற்சீரடிகளும் வெண்பாக்களும் விரவி வந்த கொச்சகக்கலி. (32) (98). | யாரைநீ யெம்மில் புகுதர்வா யோரும் புதுவ மலர்தேரும் வண்டேபோல் யாழ வதுவை விழவணி வைகலுங் காட்டினையாய் மாட்டுமாட் டோடி மகளிர்த் தரத்தரப் | | 5 பூட்டுமான் றிண்டேர் புடைத்த மறுகெல்லாம் பாட்டாதல் சான்றநின் மாயப் பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டெலாங் கேட்டு மறிவேன்மன் யான்; | | 9 தெரிகோதை யந்நல்லாய் தேறீயல் வேண்டும் பொருகரை வாய்சூழ்ந்த பூமலி வையை வருபுன லாடத் தவிர்ந்தேன் பெரிதென்னைச் செய்யா மொழிவ தெவன்; | | 13 ஓஒ, புனலாடி னாயெனவுங் கேட்டேன் புனலாங்கே நீணீர் நெறிகதுப்பு வாரு மறலாக மாணெழி லுண்கண் பிறழுங் கயலாகக் |
1. பாகனென்னும், உரையைநோக்க, பாகரென்பதை ஈற்றில் அர்பெற்று வந்த பாகென்னுஞ் சொல்லாகக் கொண்டனரென்று தோற்றுகிறது. (பிரதிபேதம்)1 அதற்குப்புத்தியானை, 2புணர்த்தற்கு, 3ஈண்டுவந்தாயென்பால்வந்தாயன் றென்றாள்தலைவி.
|