இதனால், இருவருக்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது தரவும் போக்கும் ஐஞ்சீரடுக்கிய பாட்டும் இடைமிடைந்த கலி வெண்பா. (1) (33) (99). | நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கு மவையெடுத் தறவினை யின்புறூஉ மந்தண ரிருவருந் திறம்வேறு செய்தியி னூனெறி பிழையாது குழவியைப் பார்த்துறூஉந் தாய்போ லுலகத்து மழைசுரந் தளித்தோம்பு நல்லூழி யாவர்க்கும் பிழையாது வருதனின் செம்மையிற் றரவாய்ந்த விழையணி கொடித்திண்டே ரினமணி யானையாய்; | 8 | அறனிழ லெனக்கொண்டா யாய்குடை யக்குடைப் புறநிழற்கீழ்ப் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை; | 11 | பொய்யாமை நுவலுநின் செங்கோலச் செங்கோலின் செய்தொழிற்கீழ்ப் பட்டாளோ விவளிவட் காண்டிகா காமநோய் கடைக்கூட்ட வாழுநாண் முனிந்தாளை; | 14 | ஏமமென் றிரங்குநின் னெறிமுரச மம்முரசி னேமத் திகந்தாளோ விவளிவட் காண்டிகா வேய்நல மிழந்ததோள் கவின்வாட விழப்பாளை; ஆங்கு; | 18 | நெடிதுசே ணிகந்தவை காணினுந் தானுற்ற வடுக்காட்டக் கண்காணா தற்றாக வென்றோழி தொடிகொட்ப நீத்த கொடுமையைக் கடிதென வுணராமை கடிந்ததோ நினக்கே. |
1இஃது அரசன் தலைவனாயவன் தலைவியை நீங்கி இருந்ததற்குத் தலைவி புலவிநீட்டித்து ஆற்றாளாயவழி அவட்கு நிகழ்ந்த (2) காமத்துமிகுதிறத்தை அவ்வரசனை நோக்கிச் சான்றோர் கூறியது. இது பெருந்திணை.
1. காவற் பாங்கி னாங்கோர் பக்கத்திற் றலைவன் கூறியவற்றைத் தலைவி பரத்தையராக்கிக் கூறுவதற்கு இதுவும் மேற். தொல். அகத். சூ. 45. 2. இச்செய்யுள் காமத்து மிகுதிறத்தான் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியதாதலின் மருதத்துக் கோத்தாரென்பது. (தொல். அகத். சூ. 13. நச்.) கொணப்படுகின்றது. (பிரதிபேதம்)1இது அரசன்.
|