இஃது ஏழடித்தரவும் மூன்றடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (34) (100). | ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள்சீக்குஞ் சுடரேபோல் வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்த கொடுமையு நீண்டுதோன் றுயர்குடை நிழலெனச் சேர்ந்தார்க்குக் காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையு மாண்டநின் னொழுக்கத்தான் மறுவின்றி வியன்ஞாலத் தியாண்டோருந் தொழுதேத்து மிரங்கிசை முரசினாய்; | 7 | ஐயந்தீர்ந் தியார்கண்ணு மருந்தவ முதல்வன்போற் பொய்கூறா யெனநின்னைப் புகழ்வது கெடாதோதா னல்கிநீ தெளித்தசொ னசையெனத் தேறியாள் பல்லிதழ் மலருண்கண் பனிமல்கக் காணுங்கால்; | 11 | சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கு மிரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான் கலங்கஞ ருற்றுநின் கமழ்மார்பு நசைஇயா ளிலங்குகோ லவிர்தொடி யிறையூரக் காணுங்கால்; | 15 | உறைவரை நிறுத்தகோ லுயிர்திறம் பெயர்ப்பான்போன் முறைசெய்தி யெனநின்னை மொழிவது கெடாதோதா னழிபடர் வருத்தநின் னளிவேண்டிக் கலங்கியாள் பழிதபு வாண்முகம் பசப்பூரக் காணுங்கால்; ஆங்கு; | 20 | தொன்னல மிழந்தோணீ துணையெனப் புணர்ந்தவ ளின்னுறல் வியன்மார்ப வினையையாற் கொடிதென நின்னையான் கழறுதல் வேண்டுமோ வென்னோர்க ளிடும்பையுங் களைந்தீவாய் நினக்கே. |
இதுவுமது. (1) இதன் பொருள். ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள் 1சீக்குஞ் சுடரேபோல் 2வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்தகொடுமையு
1. காமத்து மிகுதிறத்தான் அரசனை நோக்கிச் [ெ]ச (ா)ன்றோர். கூறிய தாகலின் மருதத்துக் கோத்தாரென்பர். நச். தொல். அகத். சூ. 13. (பிரதிபேதம்)1சீய்க்கும், 2ஓண்டாதார.
|