71(1) | பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய வாடுகொ ணேமியாற் பரவுது நாடுகொண் டின்னிசை முரசிற் (2) பொருப்பன் 1மன்னி யமைவர லருவி யார்க்கு மிமையத் தும்பரும் 2விளங்குக வெனவே. |
எ - து: அதுகேட்ட தோழி, யாம் (3) இல்லறம்நிகழ்த்தி இனிதிருக்குமாறு காத்தற்குப் பிறநாடுகளைக்கொண்டு இனிய ஓசையையுடைத்தாகிய முரசினை யுடைய பாண்டியன் அமைந்து வருதலை யுடைய அருவி ஆரவாரிக்கும் இமயத்திற்கு வட 3திசையிலேயும் மன்னி விளங்குகவென்று உட்கொண்டு முறி தலையுடைத்தாகிய முழங்குகின்ற கடலிடத்துப் பாம்பணையிலே பள்ளி கொண்ட வெற்றி கொண்ட சக்கரத்தினை யுடையோனை வாழ்த்துவே மென்றாள். எ - று. இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை பிறந்தது. இது தரவும் தனிச்சொல்லும் ஐஞ்சீரடி பலவும் விராய் முடுகுவண்ணம் அடியிறந்தோடிய கொச்சகவெண்பாவும் கொச்சகமும் இரண்டு நெடுவெண் பாட்டும் "வெண்பாட் டீற்றடி முச்சீர்த்தாகும்" (4) என்றதனான் இடையீற்று முச்சீரடிவந்த நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடி பெற்ற குறுவெண்பாட்டும் ஐஞ்சீரடி முடுகியலோடு தொடர்ந்த கொச்சகவெண்பாவும் நெடுவெண்பாட்டும் ஓரடியா னொன்றும் குறுவெண்பாட்டும் தனிச்சொல்லும் இரண்டு நெடுவெண் பாட்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த கொச்சகம். (5) (106). | கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் ணிமிழிசை மண்டை யுறியொடு தூக்கி யொழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர் வழூஉச்சொற் கோவலர் தத்த மினநிரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார் |
1. முல்லை நிலத்துக்குத் திருமால் தெய்வ மென்பதற்கு "பாடிமிழ் பரப்பகத் தரவணை................பரவுதும்" என்பது மேற்கோள்; தொல். அகத். சூ. 5. நச். 2. இந்நூற் பக்கம் 195 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 3. "காவற்பொருட்டு அரசன் வாழ்க...................என யாய் இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது பிறிது நினைத்திலள்" என்னும் (ஐங்குறுநூறு. 1.) உரைப்பகுதி இங்கே நோக்கற்பாலது. 4. தொல். செய். சூ. 72. (பிரதிபேதம்)1முன்னி, 2விளங்குகெனவே, 3திசையிலே மின்னி.
|