யாயின், அவன் உற்ற நோயன்றி யான் உற்ற நோயையும் மிகப்போக்குவை; இதனைக் குறிக்கொள் என்றாள். எ - று. இதனால், தலைவிக்கு அசைவு பிறந்தது. இது (1)பன்னீரடியின் இகந்து தளையும் விரவி ஐஞ்சீரடியும் வந்து ஒரு பொருணுதலாது வந்த கலிவெண்பாட்டு. (11) (112). | யாரிவ னென்னை விலக்குவா னீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை நீமர்று நின்னொடு சொல்லலோம் பென்றா ரெமர்; | 5 | எல்லா, கடாஅய கண்ணாற் கலைஇயநோய் செய்யு நடாஅக் கரும்பமன்ற தோளாரைக் காணின் விடா அலோம் பென்றா ரெமர்; | 8 | கடாஅயார், நல்லாரைக் காணின் விலக்கி நயந்தவர் பல்லித ழுண்கண்ணுந் தோளும் புகழ்பாட நல்லது கற்பித்தார் மன்ற நுமர்பெரிதும் வல்ல ரெமர்கட் செயல்; | 12 | ஒஒ, வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே லெம்மை யிகழ்ந்தாரே யன்றோ வெமர்; ஒக்கு, மறிவல்யா னெல்லா விடு; | 16 | விடேன்யா, னென்னீ குறித்த திருங்கூந்தா னின்னையென் முன்னின்று சொல்லலோம் பென்றமை யன்றி யவனைநீ புல்லலோம் பென்ற துடையரோ மெல்ல |
(இ) "படிவத்தா னெடியோனை முதற்பயந்த, தாயென்று முதுமறை பரவினும், யாயென் றல்ல தியாந்துணி யலமே" (தொல். செய். சூ. 146. பேர். உரை. மேற்கோள்) என்பவையும் இது தன்மையொடடுத்தபெயரென்று கல்லாடரும் தன்மையொடொட்டிய பெயரென்று நச்சினார்க்கினியரும் எழுதியிருப்பவையும் இங்கே அறிதற்பாலன. 1. பன்னிரண்டடியின் இகந்து ஒரு பொருணுதலாதுவரும் கலிவெண்பாட்டுக்கு இச்செய்யுள்மேற்கோள்; தொல். செய். சூ. 153. பேர். நச்.
|