பக்கம் எண் :

நான்காவது முல்லை735

சிறிதேறத் தழுவிக் கொண்டு அச்சத்தால் தளர்ந்து நடந்து பக்கத்திலுண்டான செல்லுதற்கரிய கானத்திலே சென்று ஒளித்தே னென்றாள்; அதுகேட்ட தோழி, ஏடீ! அப்பூ வீழ்ந்ததற்கு நீ அவ்விடத்தே அஞ்சுவது என்னகாரியத்திற் 1கென்றாள். எ-று.

17அஞ்சல், (1) அவன்கண்ணி நீ புனைந்தா யாயி னமரு
மவன்க ணடைசூழ்ந்தார் நின்னை யகன்கண்
வரைப்பின் (2) மணற்றாழப் 2பெய்து திரைப்பில்
வதுவையு மீங்கே யயர்ப வதுவேயா
மல்கலுஞ் சூழ்ந்த வினை

 எ - து: என்று பின்னும் நின் தலைவன் கண்ணியை நீ சூடினாயாயின் அதற்கேற்ப நம்முடைய சுற்றத்தாரும் நின்னை அவனிடத்தே அடுத்தலைச் சூழ்ந்தார்; அதுவேயன்றி அகன்ற இடத்தையுடைய முற்றத்தே மணலைத் 3தங்கப்பெய்து திரையிட்டுக் கல்யாணமும் இப்பொழுதே செய்வார்கள்; பகலேயன்றிப் போன இரவிலும் ஆராய்ந்த காரியம் 4அக்காரியமேயாம்; நீ அஞ்சாதேகொள்ளென்றாள். எ - று.

இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

5இஃது ஐஞ்சீரடுக்கி வந்த தரவும் பாட்டுஞ் சுரிதகமும் பெற்ற கலிவெண்பா. (15)

(116). பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேமெந்
தாம்பி னொருதலை பற்றினை யீங்கெம்மை
முன்னைநின் றாங்கே விலக்கிய வெல்லாநீ
யென்னையே முற்றாய் விடு;
விடேஎன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங்
கடுவய நாகுபோ னோக்கிக் கொடுமையா
னீங்கிச் சினவுவாய் மற்று;

1. “நின் கூழையு ளேறவன், கண்ணிதந் திட்ட தெனக்கேட்டு.......................... நின்னையப், பொய்யில் பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோ டையன்மா ரெல்லா மொருங்கு” கலி. 107: 30 - 34.

2. “மணற்றாழப் பெய்து” (கலி. 114: 12.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்)1என்றாள் அவன்கண்ணி, 2பெயது வதுவையும், 3தங்கப்பெய்து கல்லியாணமிப்பொழுதே, 4அக்காரியமேயாமினியஞ்சாதே, 5இதுஐஞ்சீரடுக்கி.